‘ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல்’ – திமுக-வுக்கு ஏற்பட்ட தலைவலியும் பின்னணியும்! | DMK is in trouble in the Rs 2,000 crore drug smuggling issue

New Project 10 .jpg

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “ஏற்கெனவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, நீதிமன்ற நெருக்கடியில் சிக்கி இருக்கிறது, தி.மு.க. இந்த சூழலில்தான் தற்போது போதை பொருள் கடத்தல் நெருக்கடியும் சேர்ந்து இருக்கிறது. எனவே ஒருவரை கட்சியில் சேர்ப்பதற்கு முன்னாள் பலகட்ட விசாரணைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அதை செய்யாததால் தி.மு.க தற்போது பாதிப்பை சந்தித்து இருக்கிறது. அவர் திரைப்படத்துக்கு முதலீடு செய்கிறார் என்றால், அந்த பணம் எப்படி வருகிறது என ஆளும் கட்சியின் உளவுத்துறை விசாரித்து அறிக்கை அளித்திருக்க வேண்டாமா?.

குபேந்திரன்

குபேந்திரன்

அவர் பணம் கொடுக்கிறார் என வாங்கி போட்டுக்கொண்டதால் தி.மு.கவுக்கு தற்போது கெட்ட பெயர் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு முறைக்கு 10 முறை யோசித்து பொறுப்பு கொடுத்திருக்க வேண்டும். ஜாபர் சாதிகால் ஏற்பட்ட கெட்ட பெயர் போல மீண்டும் ஏற்படக்கூடாது என தி.மு.க நினைத்தால், கட்சியில் இணைவோர் குறித்து தீர்க்கமாக தீவிரமாக விசாரிக்க வேண்டும். கடுமையாக விசாரணை நடத்தினால் தான் தடுக்க முடியும். நீங்கள் ஐடிவிங் வைத்து இருக்கிறீர்கள். அதை கட்சியை பலப்படுத்த மட்டும் பயன்படுத்தாதீர்கள். நிர்வாகிகளின் தகிடுதத்தங்கள் குறித்து விசாரிக்கவும் பயன்படுத்துங்கள். இல்லை என்றால் இப்படித்தான் அவப்பெயர் ஏற்படும்” என்றார்.

திமுகவினரோ, `அவர் குறித்த தகவல்கள் வெளியானதும், யாரும் வலியுறுத்தும் முன்னரே அவரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. மேற்கொண்டு விசாரணை நடைபெறும். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் திமுக-வுக்கு கெட்ட பெயர் என எதுவும் கிடையாது’ என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *