“நிர்மலா சீதாராமனையும், தமிழிசையையும் புதுச்சேரி மக்கள் ஏற்க மாட்டார்கள்” – நாராயணசாமி காட்டம் | Puducherry former minister Narayanasamy blams chief minister Rangasamy over giving posts to BJP

1709018670 Whatsapp Image 2022 09 15 At 13 33 25.jpeg

பா.ஜ.க வேட்பாளர்களைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறது. புதுவை மக்கள் மண்ணின் மைந்தர்களுக்குத்தான்  வாக்களிப்பார்கள். வேட்பாளரே இல்லாமல் பா.ஜ.க நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க பிரசாரம் செய்து வருகிறது. மக்கள் அதை பார்த்து வருகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க சார்பில் எந்த வேட்பாளர் நின்றாலும், இந்தியா கூட்டணி வேட்பாளர் பெரும்பான்மை பெற்று வெற்றி பெறுவார். இந்த ஆட்சியில் புரோக்கர்கள் மூலம் ஊழல் நடக்கிறது. முதலமைச்சர் அலுவலகத்தில் உள்ள புரோக்கர்கள் முதலமைச்சர் காரிலேயே செல்கின்றனர். காங்கிரஸில் ஒரு முறை போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படும். நாங்கள் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிட வேண்டும் என கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். புதுவை மக்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை ஏற்க மாட்டார்கள். தமிழிசை, நிர்மலா சீதாராமன் இருவரையும் சேர்த்துதான் சொல்கிறேன்” என்றார்.

தொடர்ந்து `அப்படியானால் ராகுல் காந்தி, புதுவை தொகுதியில் போட்டியிட முன்வந்தால் எதிர்ப்பீர்களா?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “அவர் அகில இந்திய தலைவர். எங்கள் கட்சியின் தலைவர். அவர் போட்டியிடுவதை நாங்கள் எதிர்க்க முடியுமா? தமிழிசை போட்டியிடுவதென்றால் தமிழகத்தில் தூத்துக்குடியில் போட்டியிட வேண்டியதுதானே?” என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தரப்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை களமிறக்க அக்கட்சி தலைமை முடிவெடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு அவர் தயக்கம் காட்டி வருகிறார். அதனால் ஆளுநர் தமிழிசை களமிறங்குவதற்கு காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதேசமயம் பா.ஜ.க-வின் ஒரு சில முக்கிய நிர்வாகிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நிற்க வைக்கலாம் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதைத்தான் நாராயணசாமி குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *