சுட்டிக்காட்டிய ஜூ.வி; நடவடிக்கை எடுத்த நகராட்சி – மீண்டும் விளக்கொளியில் மின்னிய 60 வருட பூங்கா | After vikatan news Rajagopal park gets new life

Njmd.jpg

இதனை அறிந்து நாம் சென்று பார்த்தபோதும் பூங்கா முழுவதும் எங்குபார்த்தாலும், மது குடிக்க பயன்படும் பிளாஸ்டிக் கப்புகள், மது பாட்டில்கள் என நிறைந்து குப்பை கூளமாக காணப்பட்டதோடு, சிலர் இரவு நேரங்களில் இந்த பூங்காவை மலம், ஜலம் கழிக்கும் இடமாகவும் பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது. அத்தோடு இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காடு போல இப்பூங்கா காணப்படுவதால் பெண்களும், குழந்தைகள் அந்த பக்கம் செல்வதற்கே அஞ்சுவதாகவும், அத்தோடு அந்த பூங்கா அருகில் தான் பேருந்து நிறுத்தம் இருப்பதால், இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் பேருந்துக்கு காத்திருக்கும் போது மிகுந்த அச்சத்தோடும், பயத்தோடும் இருப்பதாக அப்பகுதி மக்கள் வருத்தத்தோடு தெரிவித்தனர். அதனை விகடன் இணைய தளத்தில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

தொடர்ந்து நகராட்சி நிர்வாக ஆணையர் சிவராசு, அவர்களுக்கும், முஜிப் ரகுமான், நகராட்சி மதுரை மண்டல இயக்குநர் அவர்களுக்கும் நேற்று முந்தினம் (25.02.2024) இப்பூங்காவின் நிலை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனே சரிசெய்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கை வைத்த மறுநாளே (நேற்று, 26.02.2023) 66 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராசகோபால் பூங்காவை தூய்மைசெய்து, குப்பைகளை அகற்றி, மின்விளக்குகள் அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் பூங்காவுக்கு என காவலர் ஒருவரையும் நியமனம் செய்திருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக பலரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத சூழலில் இதனை செய்தியாக வெளியிட்டு தீர்வு பெற்றுத்தந்த விகடனுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். அதேபோல் நடவடிக்கை எடுத்த அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பூங்காவின் சுற்று சுவரை சரிசெய்து தரும்படியும், பூங்காவிற்கு கதவு, குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் மீண்டும் வைத்து பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும், பூங்காவினுள் இருக்கும் போர்வெல்லை சரிசெய்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் அரசுக்கு வைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *