சட்டம் எல்லாருக்கும் ஒண்ணுதான்! விபத்து ஏற்படுத்திய நடிகர்; லைசென்ஸ் கேன்சல்! கேரளாவில் அதிரடி!

Driving Licence1.jfif .png

சுராஜ் வெஞ்சாரமூடு வழக்கைப் பொறுத்தவரை – விபத்தில் உயிரிழப்பு இல்லை என்றாலும், சரத் என்கிற அந்த வாலிபருக்குக் காலில் ஃப்ராக்ச்சர் ஆகியிருக்கிறது. அது தொடர்பான நோட்டீஸுக்கும் பதில் இல்லாத பட்சத்தில் கடுப்பாகி இருக்கிறதாம் MVD. ‛‛அவர் இது தொடர்பாக பதில் ஏதும் அளித்திருந்தால், நிச்சயம் அவரின் லைசென்ஸ் ரத்தின் காலஅளவைக் குறைக்கலாம் என்று இருந்தோம்!’’ என்று பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்திருக்கிறார் MVD-யின் சீனியர் அதிகாரி. 

மேலும், ‛‛விபத்து தொடர்பாக எந்த விளக்கமும் தரவில்லை; நோட்டீஸுக்கு முறையான ரெஸ்பான்ஸும் இல்லாத நிலையில், உங்களின் லைசென்ஸை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்குக் காரணங்கள் இருந்தால் சொல்லவும்’’ என்றும் MVD, சுராஜ் வெஞ்சாரமூடுவிடம் கேள்வி கேட்டிருக்கிறது.

மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, குஞ்சாகோபோபன் என பல லெஜெண்ட்களுடன் நடித்தவர் சுராஜ். விபத்துக்கான நோட்டீஸ் பற்றி எந்த விஷயமும் தெரியவில்லை என்று சுராஜ் தரப்பில் சொல்லப்படுகிறதாம்.

மம்முட்டியுடன்...

மம்முட்டியுடன்…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *