`காங்., ஊழலைச் சுட்டிக்காட்டும் CPM, இந்தியா கூட்டணியில் ஒன்றாக சமோசா சாப்பிடுகிறது!’ – மோடி கிண்டல் | Modi slams congress CPM parties in Trivandrum bjp meeting

Screenshot 20240227 152343 777.png

இன்று நம் நாட்டில் மோடியின் மூன்றாம் அரசு பற்றிய பல்வேறு கருத்து விவாதங்கள் நடக்கின்றன. 3-ம் ஆட்சியில் இந்தியா உலகில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும். இதுதான் மோடியின் கியாரன்ட்டி. ஊழலுக்கு எதிரான யுத்தத்தை தீவிரப்படுத்துவோம், எனவே ஊழல் செய்பவர்கள் நூறு முறை யோசிப்பார்கள். 25 கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்துள்ளோம். இனிவரும் 3-வது ஆட்சியில் பல லட்சம் மக்களை வறுமையில் இருந்து விடுவிப்போம். எல்.டி.எஃப், யு.டி.எஃப் ஆகியவை கேரளாவில் கல்வி நிலையங்களை என்ன நிலைக்கு ஆக்கி வைத்துள்ளது என்பது உங்களுக்கு தெரியும். சாதாரண குடும்பத்தில் உள்ள மாணவர்கள் உயர் கல்வி பயில்வது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். எங்கள் 3-வது ஆட்சியில் கேரளாவில் உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றம் ஏற்படுத்தி, சாதாரண குடும்பத்தில் உள்ள குழந்தைகள் எளிதில் படிக்க புதிய வழி திறப்போம்.

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதி

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதி

கேரளாவில் மாநில அரசு அலட்சியமாக இருந்தபோதும், மத்திய அரசு வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை மலையாளம் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத வழி செய்துள்ளோம். நம் பாரம்பர்ய ஆயுர்வேதம், யோகா உள்ளிட்டவற்றை உலகளவில் கொண்டு சென்றுள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் கேரள மக்கள் ஐந்தரை கோடி ரூபாய் அளவுக்கு பயன் அடைந்துள்ளனர். 36 லட்சம் மக்களுக்கு ஜல் ஜீவன் திட்டம் மூலம் பைப் குடிநீர் வழங்கியுள்ளோம். 40 லட்சம் விவசாயிகளுக்கு கிசான் உதவித்தொகை வழங்குகிறோம். இளைஞர்கள் தொழில் தொடங்க 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு முத்ரா வங்கிகடன் உதவி வழங்கியுள்ளோம். அதில் அதிகமாக பெண்கள் பலன் பெற்றுள்ளனர். வந்தே பாரத் முதல், பல ஹைவே திட்டங்களை கேரளாவில் செயல்படுத்தியுள்ளோம். கேரளாவில் பா.ஜ.க ஆட்சியில் இல்லையென்றாலும், இந்த மாநில வளர்ச்சிக்காக பா.ஜ.க செயல்பட்டுள்ளது. நான் எனது அரசின் செயல்பாட்டை கூறியுள்ளேன். சி.பி.எம், காங்கிரஸ் முன்னணியின் லட்சியம் என்ன எனக் கூறட்டும். ஒரு குடும்பத்துக்காக ஆட்சியை அடகு வைத்துள்ளார்கள். கோடிக்கணக்கான மக்களின் நன்மையைவிட ஒரு குடும்பத்தின் நன்மைதான் காங்கிரஸுக்கு முக்கியம். காங்கிரஸின் அதே கொள்கையை கேரளா சி.பி.எம் அரசும் எடுத்துள்ளது. கேரளாவில் சி.பி.எம், காங்கிரஸ் கட்சியினர் மாறி மாறி அரசியல் கொலை செய்வார்கள், மோதிக்கொள்வார்கள். கேரளாவில் எதிரிகளாக இருக்கும் அவர்கள், கேரளாவுக்கு வெளியே சென்றால் நண்பர்களாகி விடுவார்கள். இப்போதைய சி.பி.எம் அரசு, காங்கிரஸ் ஆட்சியின் முன்கால ஊழல்களை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இவர்கள் இந்தியா முன்னணியில் ஒன்றாக அமர்ந்து டீ, பிஸ்கெட், சமோசா சாப்பிடுகிறார்கள். திருவனந்தபுரத்தில் அவர்கள் நடவடிக்கை வேறு, டெல்லி சென்றால் அவர்கள் நடவடிக்கை வேறு. இந்த இரட்டை நிலைப்பாடுக்கு கேரளா மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *