‘அக்னிபத்’ திட்டத்தால் இளைஞர்களுக்கு அநீதியா? – கார்கே கடிதமும் அதிர்ச்சித் தகவல்களும்! | mallikarjun kharge has written letter to the president to scrap agnipath scheme

Ulh9vmtg Mallikarjun Kharge Rahul Gandhi 650x400 20 October 22.webp.png

அக்னிபத் திட்டம் என்பது ‘அத்தக்கூலி’ வேலை மாதிரியானது. முறையான ஊதியமோ, வேறு பலன்களோ, வேலை நிரந்தரமோ அதில் கிடையாது. நான்கு ஆண்டுகளுக்கு ராணுவத்தில் பணியாற்றிய பிறகு, அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அவ்வளவுதான். என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்வினை ஆற்றின.

ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டுமென்று ஆர்வத்துடன் இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள், கடும் ஆத்திரம் அடைந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் அந்தப் போராட்டம் தீவிரமான நடைபெற்றது. பா.ஜ.க அரசின் மீது கோபமடைந்த இளைஞர்கள், ரயில்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை தீவைத்து கொளுத்தினர்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ஆனாலும், அக்னிபத் திட்டத்தை பா.ஜ.க அரசு வாபஸ் பெறவில்லை. இந்த நிலையில், ராணுவப் பணிக்கு தேர்வாகி, வேலை வழங்கப்படாமல் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து, தங்களுக்கு வேலை கிடைக்க உதவுமாறு முறையிட்டனர்.

அக்னிபத் திட்டத்தை ஓய்வுபெற்ற ராணுவ உயரதிகாரிகள் வெளிப்படையாக விமர்சனம் செய்தனர். அக்னிபத் திட்டத்தைக் கண்டு ராணுவம் அதிர்ச்சியடைந்ததாக முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே குறிப்பிட்டார். ஒரே பணியைச் செய்யக்கூடிய ராணுவத்தினர் மத்தியில், அக்னிபத் திட்டம் பாகுபாட்டை உருவாக்குகிறது என்றும், ஒரே மாதிரியான வேலைகளைச் செய்பவர்கள் மத்தியில் ஊதியத்திலும், பல்வேறு நலன்களிலும் பாடுபாடு காட்டப்படுகிறது என்றும் அவர்கள் வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *