மிஸ்ஸான காங்கிரஸ் தலைவர் / சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி… விஜயதரணி விலகியதன் பின்னணி என்ன?!| Reason Behind Vijayadharani MLA Quits Congress and joins BJP

7e439006 9d74 4917 B1ef 9487e953b2ab.jfif .png

இந்த நிலையில், விஜயதரணி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதற்கான காரணம் என்னவென்ற கேள்வியுடன், சத்திய மூர்த்தி பவன் சீனியர்களிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், “சிறு வயதிலிருந்தே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் விஜயதரணி. எனவேதான் மூன்று முறை விளவங்கோடு தொகுதியில் வாய்ப்பு கொடுத்தது, காங்கிரஸ். ஆனால் அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி அல்லது சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் மூலமாக காய் நகர்த்தி வந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக கார்கே வருவதற்கு முன்பு விஜயதரணிக்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் கார்கே பதவிக்கு வந்த பிறகு செல்வப்பெருந்தகைக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார்.

செல்வப்பெருந்தகை, அழகிரி

செல்வப்பெருந்தகை, அழகிரி

இதன் வெளிப்பாடுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பு செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது. இவரது சிபாரிசின் பேரில் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவி ராஜேஷ்குமாருக்குச் சென்றது. இது விஜயதரணிக்கு முன்கூட்டியே தெரியும். எனவேதான் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட எம்.பி சீட் கேட்டார். ஆனால் கட்சித் தலைமை அதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் காங்கிரஸ்மீது மேலும் அதிருப்தி அடைந்தார்.

இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பா.ஜ.க, தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டது. விஜயதரணி கட்சி மாறியதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. விளவங்கோடு, கேரளாவுக்கு மிகவும் அருகில் இருக்கும் தொகுதி. எனவே அங்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். எனவே வரும் தேர்தலில் யாரை காங்கிரஸ் நிறுத்தினாலும், அவர்கள் வெற்றி பெறுவார்கள்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *