பஸ்களுக்குத் தீவைப்பு; மாவட்ட எல்லைகளுக்கு சீல்… மகாராஷ்டிராவில் மீண்டும் பதற்றம்!

Ambad News 2024021183397 202402696585.jpg

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு பிரச்னைக்குத் தீர்வு காண மாநில அரசு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றியிருக்கிறது. அப்படி இருந்தும் மராத்தா இட ஒதுக்கீடு கேட்டுப் போராடி வரும் மனோஜ் ஜராங்கே, மராத்தா இன மக்களுக்கு ஒ.பி.சி சான்றிதழ் வேண்டும் என்றும், அரசு கொண்டு வந்த சட்டத்தை உடனே அமல்படுத்தவேண்டும் என்றும் கூறிக்கொண்டு, போராட்டம் நடத்துவேன் என்று மிரட்டிக்கொண்டிருக்கிறார். அதோடு தன்னைக் கொலைசெய்ய துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முயற்சி செய்வதாக நேற்று மனோஜ் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் பட்னாவிஸ் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த இன்று மும்பை செல்ல இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் மனோஜின் சொந்த ஊரான ஜல்னா மாவட்டத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. மனோஜ் தனது மும்பை பயணத்தை ஒத்திவைத்தார். நேற்று இரவு போலீஸார் மனோஜ் ஜராங்கேயின் ஆதரவாளர்கள் ஐந்து பேரை கைதுசெய்தனர்.

மனோஜ்

இதையடுத்து இன்று காலையில் ஜல்னாவில் மராத்தா சமுதாய மக்கள் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டு, போராட்டம் நடத்தினர். கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை பதற்றமாக இருக்கிறது. மும்பை-துலே நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். ஜல்னா மாவட்டத்தில் உள்ள திர்த்பூரில் அரசு பஸ் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டது. இதனால் அம்பாட் தாலுகா முழுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் மட்டும் தடை உத்தரவில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜல்னா-பீட் எல்லைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பீட், ஜல்னா மற்றும் சத்ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத்தில் இணைய சேவையும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மூன்று மாவட்டத்தில் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அமைதியான முறையில் போராடும்படி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அப்படி இருந்தும் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கி இருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *