`திருப்பதியில் VIP தரிசனம்; ஏற்பாடு செய்யுங்க’- ஆர்டர்போட்ட போலி PMO அதிகாரி; அபராதம் விதித்த கோர்ட் |High Court imposes ₹35k fine on man who posed as PMO official to get VIP temple darshan, government vehicle

1853793 1807159 985169 Delhi Hc.jpg

கோயிலில் வி.ஐ.பி தரிசனம் செய்வதற்காகவும், அரசு வாகனம் மற்றும் தங்குமிடம் போன்றவற்றைப் பெறுவதற்காகவும், பிரதமர் அலுவலக அதிகாரிபோல நாடகமாடிய நபருக்கு, டெல்லி உயர் நீதிமன்றம், ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

விவேக் கேசவன் மற்றும் பிரமோத் குமார் சிங் ஆகியோர் புதுச்சேரி மற்றும்  திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தில் உள்ள பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு போனில் அழைப்பு விடுத்துள்ளனர். அதில், பிரமோத் குமார் சிங் தன்னை பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச் செயலாளராகக் காட்டிக் கொண்டு, அரசு வாகனங்கள், தங்குமிடம் மற்றும் கோயில்களில் சிறப்புத் தரிசன வசதிகள் போன்றவற்றைக் கேட்டுள்ளார். இந்த இடங்களுக்கு விவேக் கேசவன் என்ற அதிகாரியும் தன்னுடன் வருவார் என்றும், அவருக்கும் அதே வசதிகள் அனைத்தும் தேவை என்றும் அவர் அந்த அதிகாரிகளிடம் பேசியுள்ளார்.

போன் கால்

போன் கால்

இவர்கள் இருவரும் போலிகள் என்பதைக் கண்டறிந்த சி.பி.ஐ, இவர்கள் இருவர்மீதும் 120B, 419, 420 IPC-ன் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளது. இதில், விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்த விவேக் கேசவன், “அரசாங்கத்திடமிருந்து பல்வேறு வசதிகளைப் பெறுவதற்காக, சிங் என்னுடைய பெயரையும், செல்போன் எண்ணையும் பயன்படுத்தியுள்ளார். எனவே எனக்கு இந்த மோசடியில் எந்தப் பங்கும் இல்லை. இத்தகைய செயல்களால் நான் எந்தவொரு பொருளாதாயமும் பெறவில்லை” என்று வாதிட்டார்.

ஆனால், மனுதாரரான விவேக் கேசவனின் தொடர்பு எண்ணை அழைத்த அரசு அதிகாரிகள், அவர் புதுச்சேரிக்குச் செல்கிறாரா என்பதை உறுதிப்படுத்தவும், மேலும் அவருக்குத் தேவையான சேவைகள் குறித்தும் பேசியது குறித்த தெளிவான குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரம் இருப்பதாக மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) வாதிட்டது. மேலும், புதுச்சேரியில் அவருக்கு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அரசு விடுதியில் தங்குவதற்கும்கூட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ தனது தரப்பு வாதத்தை எடுத்துரைத்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *