`ஓபிஎஸ் ரூ.5 கோடி கொடுத்தனுப்பினார்; இபிஎஸ் அடியாட்கள் அனுப்பிப் பாதுகாத்தார்!’ – தமிழ்மகன் உசேன் | admk tamil magan hussain speech at ranipet party meeting

Whatsapp Image 2024 02 26 At 4 01 28 Pm.jpeg

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய தமிழ்மகன் உசேன், ‘‘ ‘உச்ச நீதிமன்றத்தில் கையெழுத்துப் போடக் கூடாது’ என்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் என் வீட்டுக்கு ரூ.5 கோடி கொடுத்தனுப்பினார். ‘போடா ராஸ்கல்’ என்று சொல்லி, வந்தவரைத் திருப்பி அனுப்பிவிட்டு, எடப்பாடியார் வீட்டுக்குப் போய் சொன்னேன். ‘கேள்விப்பட்டேன்’ என்றவர், ‘இனிமேல், நீ வீட்டில் இருக்க வேண்டாம். இடம் ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி, ரூம் போட்டுக்கொடுத்து 15 அடியாட்களையும் அனுப்பிப் பாதுகாத்தார்.

தமிழ்மகன் உசேன்

தமிழ்மகன் உசேன்

அந்த சமயம், ‘என் தலையை எடுத்துடுவேன். உயிரை எடுத்துவிடுவேன்’ என்றெல்லாம் அரைக்கூவல் விடுத்துக்கொண்டிருந்தார்கள். அத்தனையும் தாங்கிக்கொண்டு… என் மூச்சு, என் உயிர் இந்த இயக்கம்தான் என்று இருந்தேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். நான் சீனியர் மோஸ்ட் ஆள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *