உ.பி: காவலர் தேர்வு வினாத்தாள் கசிவு… `6 மாதங்களுக்குள் மறுதேர்வு’ – யோகி ஆதித்யநாத் உத்தரவு! | UP govt cancels Police constable civil police exam and order conduct re exam within 6 months

Gridart 20240226 112935569.jpg

உத்தரப்பிரதேச காவல்துறையில் 60,244 காலிப் பாணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, Uttar Pradesh Police Recruitment & Promotion Board (UPPRPB) வெளியிட்டதையடுத்து, பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் 2,385 தேர்வு மையங்களில் இரண்டு கட்டங்களாக எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதற்கு விண்ணப்பித்த 48 லட்ச விண்ணப்பதாரர்களில் 43 லட்சம் பேர் தேர்வெழுதினர். ஆனால், தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்ததாக வெளிவந்த குற்றச்சாட்டுகள், தேர்வெழுதியவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

காவலர் தேர்வு வினாத்தாள் கசிவு - உத்தரப்பிரதேசம்

காவலர் தேர்வு வினாத்தாள் கசிவு – உத்தரப்பிரதேசம்

அதையடுத்து, நடந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் தலைநகர் லக்னோ, உத்தரப்பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.பி.எஸ்.சி) தலைமையகம் அமைந்துள்ள பிரயக்ராஜ் உட்பட பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. இந்த நிலையில், பிப்ரவரி 17, 18 தேதிகளில் நடைபெற்ற தேர்வை ரத்து செய்து, அடுத்த ஆறு மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்துவதாக மாநில அரசு அதிரடி உத்தரவு வெளியிட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *