“எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்வோம்!” – ஓ.பன்னீர்செல்வம் காட்டம் | Edappadi Palaniswami will make candidates who drop their deposits forfeit- OPS

1708826308 Img 20240224 Wa0019.jpg

தேனி மாவட்ட அமமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 -வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி., ரவீந்திரநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஓபிஎஸ், டிடிவி

ஓபிஎஸ், டிடிவி

இக்கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக-வின் உண்மை தொண்டர்கள் எல்லோரும் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டும். எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி விதிகளை மீறி போலி பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமி கட்சியை கபளீகரம் செய்தார். நான்கரை ஆண்டுகள் கொள்ளையடித்த பணத்தை சுற்றி இருப்பவர்களுக்கு கொடுத்து பொதுச்செயலாளர் பதவியை பெற்றவர். பழனிசாமியை அரசியலை விட்டே விரட்டியடிக்க வேண்டும். அதற்காக தான் டிடிவி அமமுகவை தொடங்கினார்.

நாங்களும் அதே கொள்கையோடு மாவட்டம் வாரியாக கூட்டம் நடத்துகிறோம். எடப்பாடி பழனிசாமி நிறுத்தம் வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்யவோம். அவரை எந்த தேர்தலிலும் வெற்றி அடையவிடமாட்டோம். ராஜ துரோகி பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *