“மோடியின் தலைமை நாட்டுக்கு முக்கியமானது… அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார்!” – விஜயதரணி | Leadership of Modiji is important to this country says vijayadharni

Whatsapp Image 2024 02 24 At 2 12 00 Pm.jpeg

பா.ஜ.க-வில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் அண்ணாமலையுடன் இணைந்து பா.ஜ.க-வை வளப்படுத்துவோம். பிரதமர் மோடியின் தலைமை இந்திய நாட்டுக்கு முக்கியமானது. காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு பெண்கள் வரக்கூடாது என்ற சூழல்தான் காங்கிரஸில் இருக்கிறது. மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்தேன். சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டும் அது மறுக்கப்பட்டது. தற்போது கூட சட்டமன்றத் தலைவராக என்னை விட ஜூனியருக்குத் தான் கொடுத்திருக்கிறார்கள்.

பா.ஜ.க-வில் இணைந்த விஜயதரணி

பா.ஜ.க-வில் இணைந்த விஜயதரணி

இது போன்ற அதிருப்தி நீண்டகாலமாகவே இருந்திருக்கிறது. 1999 முதல் எம்.பி தேர்தலில் பங்குபெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், சென்ற தேர்தலில் எம்.எல்.ஏ – எம்.பி தேர்தல் சேர்ந்து வந்தபோதுகூட அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கன்னியாகுமரி நாடாளுமன்றத்தில் பல்வேறு பணிகள் அப்படியே இருக்கிறது. அதை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் கண்டுகொள்ளவே இல்லை. என்னைப் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராகுவது என்னை இணைத்துக்கொண்ட கட்சி எடுக்க வேண்டிய முடிவு. கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *