`மூன்று டார்கெட்; தேர்தலுக்குப் பிறகு மாற்றம் இருக்கும்..!’ – மா.செ கூட்டத்தில் எச்சரித்த ஸ்டாலின் | Three targets, there will be change after the election; Stalin warned in the meeting

Ghaqflsb0aa3wo8.jpg

நம்மிடம் பேசிய சீனியர் அமைச்சர் ஒருவர், “சுமார் ஒண்ணே கால் மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், `தேர்தல் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு மேற்கொண்டுள்ள சுற்றுப் பயணத்தின்போது 4,000க்கும் அதிகமான கோரிக்கைகள் வந்திருப்பது மக்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. கூட்டணிப் பேச்சுவார்த்தையும் சுமூகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் ஒருசில நாள்களில் அதுவும் முடிவுக்கு வந்துவிடும். எனவே, தேர்தல் வேலைகளை உற்சாகமாகச் செய்ய வேண்டும்’ எனத் தொடங்கினார் தலைவர் ஸ்டாலின்.

மேலும், `ஒருங்கிணைப்புக் குழுக்கள் நடத்திய ஆலோசனையின்போது பலர் மீதும் புகார் இருப்பதைத் தலைமைக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள்மீது ஏன் நடவடிக்கை இல்லை என ஒவ்வொருவரும் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொருவர் குறித்தும் அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது குறித்தும் தலைமைக்குத் தெரியும் என எச்சரிக்கை செய்யவே, அந்தத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. அவர்கள்மீது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் நிச்சயம் நடவடிக்கை இருக்கும் என நான் எச்சரிக்கிறேன். தேர்தலுக்குப் பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் பல மாற்றங்களைப் பார்க்கலாம்’ எனவும் எச்சரித்தார். அதுமட்டுமல்ல இங்கே வாசிக்கப்படுவது தீர்மானம் அல்ல உங்களுக்கான டார்கெட் எனவும் கூறினார்.” என ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தவை குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

திமுக ஆலோசனையில் மா.செ-க்கள் அமைச்சர்கள், ஸ்டாலின்

திமுக ஆலோசனையில் மா.செ-க்கள் அமைச்சர்கள், ஸ்டாலின்

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீர்மானம் வாசிக்கப்பட்டது. ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடுவீடாகச் சென்று பரப்புரை செய்ய வேண்டும். பா.ஜ.க-வின் அநீதிகள், கழக அரசின் சாதனைகள், பட்ஜெட் அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.’ உள்ளிட்ட மூன்று தீர்மானங்களை டி.கே.எஸ்.இளங்கோவன் வாசித்தார். கூட்டம் முடியும் முன்பு பேசிய துரைமுருகன் முதலமைச்சரின் பிறந்தநாள் கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் உடன் பிறப்புகள் விரும்புவதாக சொல்ல, இடையில் மறித்த, முதல்வர் ஸ்டாலின், `அப்படி எதுவும் கூட்டம் நடத்த வேண்டாம்’ எனக் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *