“நான் மலாலா அல்ல; ஏனெனில்..!” – பிரிட்டனில் கவனம் ஈர்த்த காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை

Dfc8219c E5af 4806 967c 06d842196af9.jpg

காஷ்மீரைச் சேர்ந்தவர் யானா மிர் சந்தானி. பத்திரிகையாளர், பேச்சாளர், சமூக ஆர்வலர் என்ற அடையாளங்களை கொண்டிருக்கிறார். பிரிட்டனில் உள்ள ஜம்மு-காஷ்மீர் கல்வி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகப் பிரிட்டன் சென்றார். அங்குப் பிரிட்டன் பாராளுமன்ற கட்டடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சந்திப்பு அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது தற்போது கவனம் பெற்றிருக்கிறது. அவர்,“நான் மலாலா அல்ல. நான் ஏன் மலாலா இல்லை என்கிறேன் எனில், நான் ஒருபோதும் பாதுகாப்புக்காக எனது சொந்த நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலை இல்லை.

யானா மிர்சந்தானி

என் தாய்நாட்டில் சுதந்திரமாக, பாதுகாப்பாக இருக்கிறேன். நான் ஒருபோதும் எனது தாயகத்தை விட்டு ஓடி தஞ்சம் அடைய மாட்டேன். இந்தியாவின் காஷ்மீருக்குச் செல்ல அக்கறை காட்டாத, சமூக ஊடகங்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள்தான் காஷ்மீரில் அடக்குமுறை நிகழ்வதாகக் கதைகளை இட்டுக்கட்டுகிறார்கள். அப்படி கதைக்கட்டும் அனைத்து டூல்கிட்களையும் நான் எதிர்க்கிறேன். மதத்தின் அடிப்படையில் இந்தியர்களைப் பிரிப்பதை நிறுத்துமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன்.

எங்களை உடைக்க நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம். எனது காஷ்மீர் சமூகத்தை நிம்மதியாக வாழ விடுங்கள்” எனப் பேசினார். அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வில் பிரிட்டன் எம்.பி.களான பாப் பிளாக்மேன், வீரேந்திரா ஷர்மா ஆகியோர் முன்னிலையில் இங்கிலாந்து எம்.பி தெரசா வில்லியர்ஸிடமிருந்து பன்முகத்தன்மை தூதுவர் விருதை பெற்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *