`1970-ல் எழுதப்பட்ட உயில்..!’ – ரூ.3 கோடி மதிப்பிலான சகோதரி வீட்டை அரசிடம் கொடுத்த முன்னாள் எம்.பி | Puducherry former DMK MP Thirunavukkarasu gave a house worth Rs.3 crores to the government for library

Whatsapp Image 2024 02 22 At 12 44 38 Pm 1 .jpeg

புதுச்சேரி தி.மு.க.-வைச் சேர்ந்தவர் சி.பி திருநாவுக்கரசு. வழக்கறிஞரான இவர், அக்கட்சியின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்தவர். 1997-2003 ஆண்டுகளில் புதுச்சேரியின் ராஜ்சபா எம்.பியாக பணியாற்றியவர், தி.க-வில் இருந்து பிரிந்து அண்ணா கட்சி தொடங்கிய காலத்தில், அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு கல்லூரி மாணவராக இருந்தபோதே தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரது உடன்பிறந்த சகோதரி சரோஜினியும், அவரது கணவர் சுப்பிரமணியனும், புதுச்சேரி சாரதி நகரில் வசித்து வந்தனர். வயது மூப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி சரோஜினியும், பத்து நாட்கள் கழித்து அவரது கணவர் சுப்பிரமணியனும் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் தங்களுக்குப் பிறகு தாங்கள் வசித்து வந்த வீட்டை அரசு நூலகம் அமைக்க பயன்படுத்த வேண்டும் என்று, 1970-ம் ஆண்டே உயில் எழுதி வைத்திருக்கின்றனர்.

முத்லவர் ரங்கசாமியிடம் வீட்டுப் பத்திரத்தை ஒப்படைக்கும், திமுக முன்னாள் எம்.பி திருநாவுக்கரசு

முத்லவர் ரங்கசாமியிடம் வீட்டுப் பத்திரத்தை ஒப்படைக்கும், திமுக முன்னாள் எம்.பி திருநாவுக்கரசு

அத்துடன் இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அதுகுறித்து தன்னுடைய சகோதரர் திருநாவுக்கரசிடமும் கூறியிருக்கின்றனர். அதன்படி அந்த வீட்டை அரசிடம் ஒப்படைக்க முடிவெடுத்த திருநாவுக்கரசு, தி.மு.க-வின் மாநில அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்களுடன் நேற்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அப்போது சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான சகோதரியின் வீட்டுப் பத்திரம் மற்றும் சாவியை முதலமைச்சர் ரங்கசாமியிடம் ஒப்படைத்தார். அப்போது, `தன்னுடைய சகோதரியின் விருப்பப்படி, இந்த வீட்டில் உடனடியாக நூலகம் அமையுங்கள்’ என்று கோரிக்கை வைத்திருக்கும் திருநாவுக்கரசுக்கு தற்போது 86 வயது. அந்த பத்திரங்களைப் பெற்றுக் கொண்ட முதல்வர் ரங்கசாமி, `உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று உறுதியளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *