வரதட்சணை கொடுமை, துன்புறுத்தல்… ஜீவனாம்சம் கேட்டுச் சென்ற மனைவிக்கு நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

Gridart 20240223 102437783.jpg

இன்னொருபக்கம், திருமணத்துக்குப் பிறகு மனைவி தன்னை துன்புறுத்தியதாக போலீஸில் புகாரளித்த அமன், மனைவியால் தான் 12-ம் வகுப்பு பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் தற்போது வேலையில்லாமல் இருப்பதாக ஜீவனசாம்சம் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், இந்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, போலீஸிடம் அளித்த வாக்குமூலத்தில் பியூட்டி பார்லர் நடத்துவதாகவும், நீதிமன்ற மனுவில் வேலையில்லாமல் இருப்பதாகவும் மனைவி குறிப்பிட்டிருக்கும் முரண் தெரியவந்தது.

திருமண முறிவு

திருமண முறிவு

அதைத்தொடர்ந்து, வாதாடிய அமனின் வழக்கறிஞர் மணீஷ் ஜரோலா, “அமன் அந்த பெண்ணை 2020-ல் முதன்முதலாகச் சந்தித்தார். அதன்பின்னர், இருவரும் காதலிக்கத் தொடங்கிய சில மாதங்களிலேயே திருமணம் செய்ய அந்தப் பெண் வற்புறுத்தினார். அப்போது, தான் 12-ம் வகுப்பு படித்து வருவதால், படிப்பை முடித்த பிறகு திருமணம் செய்து கொள்வதாக அமன் கூறினார். ஆனால், இப்போது திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்வேன் என அந்தப் பெண் மிரட்டினார். அதனால், 2021 ஜூலையில் ஆர்ய சமாஜ் கோயிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணமான பிறகு இருவரும் வாடகை வீட்டில் வசித்துவந்தனர். பின்னர் அடுத்த இரண்டே மாதங்களில், அந்தப் பெண் பிரிந்துசெல்ல முடிவெடுத்து தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். தற்போது அமன் வேலையில்லாமல் இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

உயர்நீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்றம் உத்தரவு

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *