`புதிய சின்னத்தால் பெரிய மரியாதை..!’ – மகிழ்ச்சி தெரிவிக்கும் சரத் பவார் தரப்பு; என்ன காரணம்?! | Sharad Pawar, who lost his watch, is the new symbol for the party

1708656588 Tt.jpg

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த பிறகு ஒட்டுமொத்த கட்சியையும் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான அணிக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கிவிட்டது. அஜித் பவார் அணிக்கு அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி கடந்த 6-ம் தேதி தேர்தல் கமிஷன் இந்த முடிவை எடுத்தது. அதேசமயம் கட்சியின் நிறுவனர் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் என்ற பெயரை பயன்படுத்த தேர்தல் கமிஷன் அனுமதி கொடுத்துள்ளது. சரத் பவார் தேசியவாத என்ற பெயரை பயன்படுத்த அஜித் பவார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சரத் பவார் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் என்ற பெயரை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுத்ததோடு சரத் பவார் கட்சிக்கு புதிய சின்னத்தை ஒரு வாரத்தில் வழங்க சுப்ரீம் கோர்ட் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சரத் பவார் கட்சிக்கு புதிய சின்னத்தை ஒதுக்கி இருக்கிறது.

இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்தியில், சரத் பவார் அணிக்கு சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த உத்தரவு வரும் வரை புதிய கட்சியின் பெயர் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அக்கட்சிக்கு புதிய சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. சரத் பவார் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் அக்கட்சிக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. மராத்தியர்கள் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் துர்ஹா என்ற இசைக்கருவியை ஊதி தங்களது மகிழ்ச்சியை தெரிவிப்பது வழக்கம்.

அந்த இசைக்கருவி சத்ரபதி சிவாஜி காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த இசைக்கருவியை ஒருவர் வாசிப்பது போன்ற ஒரு சின்னத்தை சரத் பவார் அணிக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கி இருக்கிறது. இது குறித்து சரத்பவார் கட்சி தரப்பில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வரவிருக்கும் தேர்தலுக்கு எங்கள் சின்னமாக துர்ஹா (மேன் ப்ளோயிங் துர்ஹா) பெறுவது எங்கள் கட்சிக்கு ஒரு பெரிய மரியாதை. சரத் பவார் தலைமையில் டெல்லி அரியணையை அசைக்க துர்ஹா இப்போது தயாராக இருக்கிறது ” என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *