தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்: மக்கள் மதிப்பீடு என்ன? – விகடன் கருத்துக்கணிப்பு! | tamilnadu dmk government budget 2024 2025 vikatan polls result

Untitled Design 2024 02 23t221018 025.png

ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 19-ம் தேதி, தமிழ்நாடு அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 20-ம் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதில், “நிதிப்பற்றாக்குறை ரூ.94,060 கோடியாக உயரும். மூலதன செலவினங்கள் ரூ.47,681 கோடியாக அதிகரிப்பு. ஆட்டிஸம் உடையோருக்கு ரூ.25 கோடியில் உயர்திறன் மையம்.

விகடன் கருத்துக்கணிப்பு

விகடன் கருத்துக்கணிப்பு

‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ், இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். 500 புதிய மின் பேருந்துகள் வாங்கப்படும். இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம். 1,400 புதிய தானியங்கி மழைமானிகளையும், 100 புதிய தானியங்கி வானிலை நிலையங்களை நிறுவ ரூ.32 கோடி நிதி ஒதுக்கீடு. வெள்ளம், நில அதிர்வு உள்ளிட்டவற்றை கண்காணித்து பேரிடர் அபாய அளவை குறைக்க தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்” உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *