காங்கிரஸ்: டெல்லி, உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு – மெல்ல மீள்கிறதா ‘இந்தியா’ கூட்டணி?! | Congress finalised Uttar paradesh seat sharing with SP and Delhi seat sharing with AAP

793c5b9b Deae 44a2 8d3a 790167ff558b.jfif .png

சில மாதங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு செய்துகொள்ள சமாஜ்வாடி கட்சி விரும்பியது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் வலுவாக இருப்பதால், சமாஜ்வாடியுடன் தொகுதிப்பங்கீடு செய்துகொள்ள காங்கிரஸ் விரும்பவில்லை. எனவே, அங்கு சமாஜ்வாடி கட்சி தனித்துப் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. தற்போது, மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்திருக்கிறது காங்கிரஸ்.

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

இதேபோல, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரஸுக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதன்படி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, புதுடெல்லி ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவிருப்பதாகவும், கிழக்கு டெல்லி, வடக்கு டெல்லி, சாந்தினி சௌக் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மேலும் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள சந்தேஷ்காலி கலவரம் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தான் காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தைக்கு மம்தா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிராவிலும் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டி இருக்கிறது.

தற்போது, தங்கள் கூட்டணி மெல்ல பழைய நிலைக்குத் திரும்புவதாக ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *