"காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் நேரத்தில் கெஜ்ரிவால் கைதுசெய்யப்படுவார்!" – டெல்லி அமைச்சர்

Aravind Kej Cover 2.jpg

மக்களவைத் தேர்தல், காங்கிரஸ் – ஆம் ஆத்மி சீட் பகிர்வு, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் என அரவிந்த் கெஜ்ரிவாலைச் சுற்றி அடுத்தடுத்த விஷயங்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. இதில், அமலாக்கத்துறை ஆறாவது சம்மனும், கெஜ்ரிவாலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தபோது, திடீரென சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார் கெஜ்ரிவால். அடுத்தகட்டமாக, சண்டிகர் மேயர் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட ஆம் ஆத்மி, ஒரு வழியாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் வெற்றி பெற்றதையடுத்து, டெல்லியில் காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி 3 இடங்களை ஒதுக்குவதாகப் பேச்சுகள் வந்துகொண்டிருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்

இவ்வாறு மக்களவைத் தேர்தலுக்கான அடுத்தடுத்த வேலைகளில் ஆம் ஆத்மி ஈடுபட்டுக்கொண்டிருக்க, பிப்ரவரி 26-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 7-வது சம்மன் அனுப்பியிருக்கிறது. இந்த நிலையில், ஆம் ஆத்மி காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் நேரத்தில் கெஜ்ரிவால் கைதுசெய்யப்படுவார் என்று தகவல் வந்திருப்பதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசிய சவுரப் பரத்வாஜ், “காங்கிரஸுடன் ஆம் ஆத்மி பல மாநிலங்களில் கூட்டணி வைக்கும் நேரத்தில் கெஜ்ரிவால் கைதுசெய்யப்படுவார் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் இரண்டு நாட்களுக்குள் கெஜ்ரிவாலைக் கைதுசெய்ய, தயாராக இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது.

சவுரப் பரத்வாஜ்

அதன்படி, கைது நோட்டீஸ் இன்று மாலை அல்லது நாளை அனுப்பக்கூடும். ஆம் ஆத்மி – காங்கிரஸ் எங்கு இணைந்தாலும், பா.ஜ.க.வுக்கு நெருக்கடி ஏற்படும். இல்லையென்றால், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுபவர்கள் முன்னாள் ஆளுநரிடம் (சத்யபால் மாலிக்) ரெய்டு நடத்த மாட்டார்கள். தோல்விக்குப் பயந்தவர்கள்தான் இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறார்கள்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *