'ஒற்றை செங்கலுடன் உங்க இளவரசர் வந்தாரே, என்ன ஆச்சு?!' – முதல்வருக்கு வானதி கேள்வி

Whatsapp Image 2024 02 23 At 10 02 34.jpeg

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நிகழ்ச்சி கோவை சிங்காநல்லூர் தொகுதியில்  நடைபெற்றது. இதில் பேசிய  பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், “தமிழகத்தின் முகமாக முருகனை வைத்திருப்பவர் பிரதமர் மோடி. தமிழகத்தில் நேர்மையான ஆட்சி கொடுக்க வேண்டும் என்பது பாஜகவின் இலக்கு.

வானதி சீனிவாசன்

இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலம் தமிழகம் என்கின்றனர். இந்தியாவில் அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாகவும் தமிழகம் இருக்கிறது. சிறுகுறு தொழில்கள் அதிகமாக பலன் பெற்ற இடம் கோவை. ரேசன்கடையில் பணம் கொடுக்கின்றனர். ஏன் வங்கி மூலம் கொடுக்கவில்லை. மக்களை அலைகழிப்பதுதான் திராவிட மாடல்.

வரிவருவாயை திரட்ட எந்த நடவடிக்கையும் இந்த அரசு  எடுக்கவில்லை. நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கோவை நூலகம் குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பினேன். 2026-ம் ஆண்டு நூலகம் அமைக்கப்படும் என பதிலளித்து முதல்வர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை குறிப்பிட்டு  கிண்டலாக பதிலளித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

சட்டசபை தேர்தலின் போது ஒற்றை செங்கலுடன் உங்கள் இளவரசர் வந்தாரே. உங்களுக்கு வாக்களித்து 3 ஆண்டுகளாகிவிட்டது. அந்த ஒற்றை செங்கலை வைத்து எய்ம்ஸ் கட்டிவிட்டீர்களா. இல்லை தானே.

மத்திய அரசுக்கு எந்த நேரத்தில், எந்த மாதிரி இந்தத் திட்டத்தை செய்யவேண்டும் என்பது தெரியும். இவர்களே நேரடியாக ஜப்பான் சென்று பேசியும் வந்துள்ளனர். அதன் பணிகள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இவர்களால் எதையெல்லாம் செய்ய முடியவில்லையோ, அந்த பழியை தூக்கி மத்திய அரசு மீது போட்டுவிடுகின்றனர்.

மதுரை எய்ம்ஸ்

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சொந்தக் கட்சியால் மட்டுமே தோல்வி அடையப் போகிறார்கள். நீங்கள் நடத்தும் அராஜக, ஊழல் ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். பா.ஜ.க உங்களின் அனைத்து லஞ்ச லாவண்யங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்லும். தமிழ்நாட்டை ஏமாற்றலாம் என்று பகல் கனவு காண வேண்டாம்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *