`ஊழலுக்குப் பேர்போன மத்திய அரசைத் துடைத்தொழிப்போம்!’ – பாஜக யாத்திரையில் ஒலித்த பாடலால் சர்ச்சை | BJP Kerala’s promo song says corrupt government at the centre

Fb Img 1708674267303.jpg

,தமிழ்நாட்டில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை `என் மண், என் மக்கள்” யாத்திரை நடத்துவது போன்று, கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் ‘கேரள பாதயாத்திரை’ என்ற பெயரில் பயணம் மேற்கொண்டு வருகிறார். பொன்னாணி பகுதியில் மூன்று மணிநேரம் நடந்த பாதயாத்திரை, `பாஜக கேரளம்’ என்ற யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது ஒலிபரப்பப்பட்ட பிரசார பாடலில் மத்திய அரசுக்கு எதிரான வரிகள் இடம்பெற்றன. ‘மத்தியில் இருப்பவர்கள் ஊழல்வாதிகள். ஊழலுக்குப் பெயர்போன மத்திய அரசை துடைத்தொழிக்க அணிதிரளுவோம்’ என்ற வரிகள் ஒலிபரப்பப்பட்டது, சர்ச்சையைக் கிளப்பியது. மாநில பா.ஜ.க-வின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில், மத்திய அரசுக்கு எதிரான பாடல் வரிகள் இடம்பெற்றது குறித்து, சமூக வலைதளங்களில் மீம்ஸ், ட்ரோல் உள்ளிட்டவை வைரலானது. இதையடுத்து அந்த வீடியோ யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டது. பா.ஜ.க ஐ.டி விங்க் நிர்வாகிகளிடம் மாநிலத் தலைமை இது குறித்து விளக்கம் கேட்டது. ஜெனரேட்டர் பழுதான சமயத்தில் யூடியூபிலிருந்து பாடல் எடுக்கப்பட்டதாகவும், யூடியூபில் பா.ஜ.க பிரசார பாடல் என டைப் செய்து பிளே செய்தபோது, முந்தைய மத்திய யு.டி.எஃப் ஆட்சிக்கு எதிராக பா.ஜ.க வெளியிட்ட பாடல் ஒலிபரப்பானதாகவும், மலப்புறம் மாவட்ட சோசியல் மீடியா விங்க் விளக்கம் அளித்துள்ளது.

மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் தலைமையில் நடக்கும் கேரள பாதயாத்திரை

மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் தலைமையில் நடக்கும் கேரள பாதயாத்திரை

அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது பா.ஜ.க மாநிலத் தலைமை. அதே சமயம் கைதவறி நடந்த சம்பவம் என்பதால், நடவடிக்கை தேவையில்லை என கேரள மாநில பா.ஜ.க பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். ஐ.டி செல்லின் செயல்பாடு தேசியத் தலைமைக்கு திருப்திகரமாக உள்ளதாகவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விவகாரம் அரசியல்ரீதியாகவும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *