‘உட்கட்சி பூசல் டு தொகுதி பங்கீடு சிக்கல்கள்..!’ – சமாளிப்பாரா செல்வப்பெருந்தகை? | TN Congress president Selvaperunthagai may face challenges in seal sharing

Selva Perunthagai.jpg

ஆனால் இதை பலரும் விரும்பவில்லை. ‘பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியில் இருந்த எங்களது வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது’ என கொதித்து வருகிறார்கள். முன்னதாக அவருக்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்ட போதே எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக விஜயதரணி தரப்புக்கு ஏக வருத்தம். இந்த சூழலில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது, டெல்லி. மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 9 இடங்களை காங்கிரஸூக்கு ஒதுக்கியது தி.மு.க. இந்த முறை அதனை குறைக்க திட்டமிட்டு இருப்பதாக சமீபத்தில் நடத்த ஆலோசனை கூட்டங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

சத்தியமூர்த்தி பவன்

சத்தியமூர்த்தி பவன்

ஆனால் தொண்டர்களின் விருப்பம் கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட இடங்களையாவது மீண்டும் பெற வேண்டும் என்பது தான். ஆனால் அது செல்வப்பெருந்தகைக்கு கடும் சவாலானதாகவே இருக்கும். ஏற்கெனவே சட்டமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்களை போன்று ஆளும் கட்சிக்கு ஆதரவாக பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருக்கிறது. எனவே சீட் பங்கீட்டின் போதும் தி.மு.கவை எதிர்த்து பேசாமல் மெளனமாக இருந்தால் தொண்டர்களிடத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டு விடும். எனவே தி.மு.கவிடம் மேலும் நல்ல பெயர் எடுப்பாரா? அல்லது தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *