Farmers Protest: போராட்டத்தில் விவசாயி உயிரிழப்பு… உறுதிப்படுத்திய பகவந்த் மான்; மறுக்கும் போலீஸ்!| Punjab CM Bhagwant Mann confirms that one farmer died in farmers protest but haryana police says it is fake

Screenshot 2024 02 22 11 06 32.png

ஆனால், ஹரியானா காவல்துறையோ, “எந்த விவசாயியும் இறக்கவில்லை. இது வெறும் வதந்தி”‘ என தனது அதிகாரப்பூர்வ X சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதோடு, ஹரியானா காவல்துறையின் ஏ.ஐ.ஜி, மற்றும் செய்தித் தொடர்பாளரான மனிஷா சௌத்ரி, “டாடா சிங் – கானௌரி எல்லையில், போராட்டக்காரர்கள் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் போலீஸாரை சுற்றி வளைத்து, மிளகாய்ப் பொடியைத் தூவி, தடிகளைப் பயன்படுத்தி போலீஸாரைத் தாக்கினர். இதில், சுமார் 12 போலீஸார் படுகாயமடைந்தனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

பகவந்த் மான்

பகவந்த் மான்

இருப்பினும், சுபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “கானௌரி எல்லையில் நடந்த சம்பவத்தின் போது 21 வயது சுபாகரன் இறந்த செய்தி கிடைத்தது. இந்த துயரமான நேரத்தில் சுபாகரனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்குப் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அனைத்து வகையிலும் உதவுவோம் என்று உறுதியளிக்கிறோம். பிரேத பரிசோதனைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

இதனால், தொடர்ந்து விவசாயிகள் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இப்படியிருக்க, விவசாயிகள் சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர், இரண்டு நாள்களுக்குப் போராட்டத்தை நிறுத்திவைப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை மாலை முடிவு வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, “ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையில் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்துப் பிரச்னைகளையும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. மீண்டும் விவசாயத் தலைவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறேன்” என்று நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *