“திருமாவளவன் எதிர்காலத்தில் ஏன் துணை முதலமைச்சராக உருவாக கூடாது?!” – கேட்கிறார் விசிக ஆதவ் அர்ஜூனா| VCK Aadhav Arjuna interview regarding his new post in party

Whatsapp Image 2024 02 22 At 12 29 56.jpeg

“ஒரு தேர்தல் வியூக வகுப்பாளராக சொல்லுங்கள்… 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் தி.மு.க-வே போட்டியிட வேண்டும் என நினைப்பது சரிதானா?”

“2021 சட்டமன்றத் தேர்தலில் 188 தொகுதிகளில் தி.மு.க நிற்காமல் இருந்திருந்தால் பெரும்பான்மை கிடைத்திருக்குமா என்பது விவாதத்துக்குரியதுதான். அவர்கள் பக்கம் நின்று பார்த்தால் நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக இருந்து, யார் ஆட்சியில் இருந்தாலும் வலுவான கோரிக்கைகளை திட்டங்களை கேட்டு பெற முடியும், மேலும் கூட்டணி ஆட்சி அமைந்தால் அதில் பங்கேற்க முடியும் என்பதால் அந்த கருத்து இருக்கிறது ஆனால் கூட்டணிக் கட்சிகளுக்கு பிரச்னை ஏற்படாத வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் முடிவெடுப்பார். 2019, 2021 தேர்தல்களில் அப்படித்தான் கூட்டணியை உருவாக்கினார்”

திருமாவளவன்

திருமாவளவன்

“துணைப் பொதுச் செயலாளராகியுள்ளீர்கள்… வி.சி.க-வுக்கான எதிர்கால செயல்திட்டங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள்?”

“தலித் என்பதனால் அரசியல் ஆளுமையும் அதிகாரமும் கிடைக்க கூடாதென்ற கருத்து இன்னும் இருக்கிறது, 4 எம்.எல்.ஏ-க்கள், 2 எம்.பிக்கள் இருக்கிறார்கள். வரும்காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகமாக வேண்டும். வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். அப்படி கட்சி வளரும்போது எதிர்காலத்தில் திருமாவளவன் ஏன் துணை முதலமைச்சராக உருவாக கூடாது.. மத்திய மாநில அமைச்சரவையில் வி.சி.க-வின் ஏன் பங்குபெறக் கூடாது. அதிகாரத்தை நோக்கி வி.சி.க நிர்வாகிகள் வரும்போது குறிபிட்ட சமூக மக்களும் வளர முடியும். அதிகாராக பரவல் மேலும் அதிகரிக்க செய்ய வேண்டுமென பணியாற்ற ஆரம்பித்திருக்கிறோம். கூடியவிரைவில் நடக்கும். அது எளிமையான பணி அல்ல. அதற்காக உழைப்போம்”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *