திண்டுக்கல்: அகற்றப்படாமல் இருந்த குப்பை குவியல்; சுட்டிக்காட்டிய ஜூ.வி – நடவடிக்கை எடுத்த நிர்வாகம் | After Vikatan article, local administration took action in dindigul

Whatsapp Image 2024 02 22 At 17 10 49.jpeg

திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து – திண்டுக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் குவியல் குவியலாக குப்பைகள் காணப்பட்டது. இந்த பைபாஸ் சாலையானது கொடைக்கானல் செல்வதற்கான மிகமுக்கியமான ஒற்றை  சாலையாகும். இந்த பைபாஸ் சாலையில் துணிகள், சேலைகள், குப்பைகள், இறைச்சி கழிவுகள் என நிறைந்து கடந்த 25 நாள்களாக துர்நாற்றம் வீசு வந்தது. இதை கண்டும் காணாமல் இருக்கிறது மாவட்ட நிர்வாகம் என குற்றம்சாட்டினர் அப்பகுதியினர். இதனை நேற்று ஜூனியர் விகடன், இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

அப்போது இந்த குப்பைகளுக்கு காரணம் என்னவென்று விசாரித்து அவரை விரிவாக கவர் செய்திருந்தோம். பழனி அருள்மிகு ஶ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் தைப்பூச திருவிழாவினையொட்டி சிறிய வடிவிலான அட்டையினால் செய்யப்படும் கொட்டு (டோல்), சுண்ணாம்பு தென்னை மட்டை நாரினால் செய்யப்படும் சுவாமி சிலைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு பொம்மைகள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்ய கடந்த 3 மாதங்களாக இவ்விடத்தில் 45 வட இந்திய குடும்பங்கள் கூடாரம் (டென்ட்) அமைத்து தங்கி இருந்தார்கள். தற்போது தைப்பூச சீசன் நிறைவடைந்தையடுத்து அவர்கள் இவ்விடத்தை விட்டு சென்றுவிட்டனர். ஆனால் அவர்கள் போட்டுவிட்டு சென்ற துணிகள், குப்பைகள், கூடாரம் அமைக்க பயன்படுத்திய பிளாஸ்டிக் பைகள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள்.

வட இந்திய தொழிலாளர்கள் இவ்விடத்தை விட்டு சென்று 25 நாள்கள் ஆகியும், அக்குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் இருந்ததாக வேதனை தெரிவித்தார்கள் அப்பகுதி மக்கள். அதனை விரிவாக செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த செய்தியின் காரணமாக, சிவகிரிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அக்குப்பைகளை ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றி தற்போது அவ்விடம் தூய்மை செய்யப்பட்டுள்ளது. பல நாள்களாக நாங்கள் முறையிட்டும் தீர்வு எட்டப்படாத இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருப்பதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *