சிதம்பரம்: `வரவு, செலவு கணக்கை உடனே தாக்கல் செய்யுங்கள்’ – தீட்சிதர்களிடம் கடுகடுத்த உயர் நீதிமன்றம்

4.jpg

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலை, அங்கிருக்கும் தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், `நடராஜர் கோயில் நான்கு கோபுரங்கள் அமைந்திருக்கும் பகுதியிலும், முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களிலும் எந்தவித அனுமதியுமின்றி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

சிதம்பரம் தீட்சிதர்கள்

பழைமையான கோயில்கள் முன் அனுமதி பெறாமல், எந்தவிதமான கட்டுமானங்களையும் கட்டக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இருக்கிறது. ஆனால் அதையும் மீறி ஆறு அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டிருக்கிறது. எப்படியான பணிகள் நடக்கிறது என்பதே தெரியவில்லை. கோயில் வளாகத்தில் இருந்த சுமார் 200 ஆண்டுகள் பழைமையான மரங்களும் வெட்டப்பட்டிருக்கின்றன’ என்று குறிப்பிட்டிருந்தது. அந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான தீட்சிதர்கள் தரப்பு, கடைகள், அன்னதானக் கூடம் என்று எதையும் கட்டவில்லை. தற்காலிக அலுவலகம் மட்டும்தான் அங்கு செயல்படுகிறது’ என்று விளக்கமளித்தனர். அப்போது, `புராதனக் கோயில்களில் அனுமதியின்றி கை வைப்பதற்கு, நீதிமன்றம் யாரையும் அனுமதிக்காது. கோயில்கள் பக்தர்களுக்கானது மட்டும்தான். அவற்றின் மீது வேறு நோக்கத்துடன் யாரும் கை வைத்தால், அவர்களை இந்த நீதிமன்றம் தடுக்கும்’ என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில்

மேலும், கோயிலின் நிர்வாகம், ஆருத்ரா தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் மூன்று ஆண்டுகள் வரவு செலவு கணக்குகள், வருமான வரி தாக்கல் செய்த விபரங்கள் உடனே தாக்கல் செய்யவும் தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *