கழுகார் அப்டேட்ஸ்: `ஆ.ராசாவைக் கைவிட்ட மதுரை திமுக’ டு `போட்டியிலிருந்து பின்வாங்கிய இளம் புள்ளி!’ | Kazhugar updates on A.Raja madurai issue and other politics

Juniorvikatan.jpeg

பட்ஜெட் உரை சட்டமன்றத்தில் வாசிக்கப்படுவதற்கு முன்பு, கடுகளவுகூட விஷயம் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பது காலம் காலமாக அதிகாரிகள் கடைப்பிடிக்கும் கறார் நடைமுறை. ஆனால், இந்த முறை அரசுத் தரப்பே தனியார் நிறுவனம் ஒன்றுக்கு முக்கியத் தகவல்களையெல்லாம் கொடுத்துவிட்டது என்று புலம்புகிறார்கள் அதிகாரிகள். சட்டமன்றத்தில் பட்ஜெட் வாசிக்கும்போதே, அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை டிஜிட்டல் கார்டுகளாக விளம்பரம் செய்ய முடிவுசெய்த ஆளுங்கட்சிக்கு நெருக்கமான நிறுவனமே இந்த மரபு மீறலுக்குக் காரணமாம். “உங்கள் ஆர்வம் புரிகிறது… ஆனால், சபையில் அதிகாரபூர்வமாக வாசிப்பதற்கு முன்பே தனியார் நிறுவனத்திடம் பட்ஜெட் தகவல்களைக் கொடுக்கக் கூடாது” என்று துறை அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், சம்பந்தப்பட்டவர்கள் அதைக் காதிலேயே வாங்கவில்லையாம். “இதெல்லாம் ரொம்பத் தப்புங்க… இதேபோல, நாளை எதிர்க்கட்சியினரும் பட்ஜெட் தகவல்களை முன்கூட்டியே கேட்டால் என்ன செய்வது?” என்று லாஜிக்காகக் கேட்கிறார்கள் அதிகாரிகள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *