“கரும்பு விவசாயி சின்னம் கைமாறியது யதார்த்த நிகழ்வல்ல!" – சந்தேகிக்கிறார் நா.த.க பாத்திமா பர்கானா

64cd1d279974c.jpg

“உங்கள் கட்சிக்கு எதிராக எது நடந்தாலும் பா.ஜ.க-வின் பழிவாங்கல் என முத்திரை குத்தப் பார்க்கிறீர்களா?”

“சின்னமும் சரி என்.ஐ.ஏ ரெய்டும் சரி.. பழிவாங்கல் நடவடிக்கை இல்லாமல் வேறென்ன.. இதெற்கெல்லாம் சாட்சியாக பா.ஜ.க பிரமுகர்களே பேசிவருகிறீர்கள்… தேச ஒற்றுமைக்கு எதிரான கட்சி என என்.ஐ.ஏ ரெய்டு நடக்கும்போதே மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசுகிறார்… பிறகு விசாரணைக்கு அழைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளை அச்சுறுத்துகிறார்கள். 2024-க்கு பிறகு நாம் தமிழர் கட்சியே இருக்காது என அண்ணாமலை பேசுகிறார். சின்னம் கைமாறுகிறது. இவர்கள் பேசுவதெல்லாம் செயல்வடிவம் பெறுகிறதென்றால் இது நா.த.க-வை முடக்கும் பா.ஜ.க-வின் அப்பட்டமான பழிவாங்கலே…”

நாம் தமிழர் கட்சி சின்னம்

“அங்கீகரிக்கப்படாத ஒரு கட்சியின் சின்னத்தை மற்றொரு கட்சி கேட்கும்போது தேர்தல் ஆணையத்தின் முடிவு  இறுதியானதுதானே?”

“அப்படி யதார்த்தமான ஒரு நிகழ்வாக நாம் தமிழர் கட்சி இதனை பார்க்கவில்லை. இது திட்டமிட்டே நிகழ்ந்திருக்கிறது. கரும்பு விவசாயி சின்னத்தை பெற்றிருக்கும் பாரதிய பிரஜா அகியதா என்ற கட்சியின் தலைவர் பா.ஜ.க-விலிருந்து வந்தவர். தேர்தலை சந்திக்காத அந்த லெட்டர் பேட் கட்சிக்கு எங்கள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் வருமானவரி தாக்கல், ஒரு பொதுத் தேர்தலை சந்தித்திருக்க வேண்டும் என சின்னம் வழங்குவதில் யாருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற அனைத்தும் விதிமுறைகளையும் பூர்த்தி செய்திருக்கிறது. ஆனாலும் சின்னம் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை”

“`கரும்பு விவசாயி’ சின்னம் இல்லாமல் தேர்தலை சந்தித்தால் பெரும் பின்னடைவு என்பதால் இப்படி கொதிக்கிறீர்களோ!”

“வாய்ப்பில்லை. கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காமல், வேறு எந்த சின்னமாக இருந்தாலும் மக்களிடம் நா.த.க எளிதாக கொண்டு செல்லும். நா.த.க-வினர் ஒவ்வொருவரும் ஊடகமாகவே செயல்படுகிறோம். நேரடியாக சின்னத்தை கொண்டு செல்லும் படைபலமும் இருக்கிறது. மேலும் சின்னத்தை மட்டுமே பார்த்து வாக்களிக்கும் மக்களல்ல நா.த.க ஆதரவாளர்கள். சின்னத்தைவிட எங்கள் எண்ணத்துக்கே மதிப்பு. கட்சிகளுக்கு சின்னங்கள் வேண்டாம்… எண்களின் அடிப்படையில் அடையாளப் படுத்துங்கள் என முன்பே கோரிக்கை வைத்து பேசக்கூடியவர் எங்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்”

என்.ஐ.ஏ (NIA)

“தீவிரவாத தடுப்பு பிரிவான என்.ஐ.ஏ, நா.த.க நிர்வாகிகளை விசாரிப்பது, சோதனை நடத்துவதன் மூலம் மக்களுக்கு உங்கள்மீது அச்சம் எழுந்திருக்குமே?!”

“மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், இப்படியான ரெய்டு அச்சுறுத்தலுக்கெல்லாம் அஞ்சும் இயக்கமல்ல நாம் தமிழர். மேலும் இதனால் மக்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு களங்கம் விளைவிக்கலாம் என்ற முயற்சியும் பலிக்கப்போவதில்லை. மாறாக நாம் தமிழர் பெருவெற்றிபெறும். என்.ஐ.ஏ நடத்திய இந்த ரெய்டு மூலமாகவும் சின்னம் முடக்கப்பட்டதாலும் பா.ஜ.க-வின் ’பி’ டீம் என்ற பொய் பிரசாரம் தவிடுபொடியாகியுள்ளது”

முதல்வர் ஸ்டாலின்

“தி.மு.க கூட்டணி பலமாக இருக்கிறது.. 40க்கு 40 என கருத்து கணிப்புகள் சொல்கிறதே!”

“கருத்து திணிப்புகள் பற்றியெல்லாம் எங்களுக்கு சற்றும் கவலையில்லை. தி.மு.க வெற்றிபெறும் என்ற கருத்துருவாக்கம் செய்யும் பிரசாரம் அது. ஆசிரியர்கள் போராட்டம், பேருந்து பயணிகள் தவிப்பு, மாற்றுதிறனாளிகள் போராட்டம், அரசு பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம், வேங்கைவயல் அவலம், போராட்டக்காரர்களை ஒடுக்குவது என அடுக்கடுக்கான விவகாரங்களில் மக்கள் கோபத்தில் இருக்கும்போது எப்படி தி.மு.க-வுக்கு வாக்களிப்பார்கள்?”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *