`கட்டட பாதுகாவலர் வேலை என சென்ற இந்தியர்களை போரிட வைக்கிறார்கள்!’ – மீட்க நடவடிக்கை கோரும் ஒவைசி | AIMIM chief says, agent cheats indians by give job opportunity in russia and forced in war against ukraine

Screenshot 2024 02 13 16 50 13.png

மேலும், ஜெய்சங்கருக்கு ஒவைசி எழுதியிருக்கும் கடிதத்தில், “முகமது அஸ்ஃபான், அர்பாப் ஹுசைன், ஜாகூர் அகமது ஆகியோர் ஹைதராபாத் திரும்ப உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் வேலை நிமித்தமாக ரஷ்யாவுக்குச் சென்றதாகவும், ஆனால், அவர்கள் இந்திய முகவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் தள்ளப்பட்டனர் என்றும் தெரிய வருகிறது.

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா – உக்ரைன் போர்

25 நாள்களாக அவர்கள் தங்கள் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளவில்லை. அவர்களது குடும்பத்தினர் மிகவும் கவலைப்படுகிறார்கள், மேலும், தங்கள் குடும்பத்தில் அவர்கள் மட்டுமே சம்பாதிப்பவர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

முன்னதாக, கடந்த டிசம்பரில் வெளியான வீடியோ ஒன்றில், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் பணி அனுமதி தனக்கு கிடைத்திருப்பதாகக் கூறிய ஃபைசல் கான், ரஷ்ய ராணுவத்துடன் வேலை நடந்து வருவதாகவும், ஏழு பேர் ரஷ்யாவில் வேலைசெய்வதற்கான அனுமதி பெற்றிருப்பதாகவும் இன்னொரு வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *