அண்ணன் அரசுக்கு எதிராகப் போராட்டம்; ஒய்.எஸ்.ஷர்மிளா கைது… ஆந்திர அரசியலில் பரபரப்பு! | Y S Sharmila, 40 Congress workers detained for ‘Chalo Secretariat’ protest

7d5jkjhz.jfif .png

இதற்கிடையில், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளாவை வீட்டுக் காவலில் வைப்பதற்காக அரசு திட்டமிட்டிருந்ததாகச் செய்திகள் வெளியானது. அதன் காரணமாக, ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் அலுவலகத்திலேயே நேற்றிரவு தங்கியிருந்தார். இந்த நிலையில், இன்று பேரணி நடத்த முயன்ற நிலையில், ஒய்.எஸ்.ஷர்மிளா உள்ளிட்ட 40 பேரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஒய்.எஸ்.ஷர்மிளா

ஒய்.எஸ்.ஷர்மிளா

இது குறித்து ஒய்.எஸ்.ஷர்மிளா, “இந்தப் போராட்டம், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தித் தொடங்கப்பட்டது. ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 5 ஆண்டுகளில் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கத் தவறிவிட்டார். வேலையில்லாதவர்கள் சார்பாக நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால், எங்களை வீட்டுக் காவலில் வைக்க முயற்சி செய்வீர்களா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *