Tamil News Live Today: மீண்டும் போராட்டத்தை தொடங்கிய டெல்லி விவசாயிகள்! | Tamil News Live Today live updates dated 21-02-2024

Pd78grjg Farmer On Tractor Exclusive 625x300 13 February 24.jpg

மீண்டும் போராட்டத்தை தொடங்கிய டெல்லி விவசாயிகள்! 

பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் விவசாய விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்கவேண்டும், விவசாயிகள் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி கடந்த 13-ம் தேதி பேரணியாக புறப்பட்டனர். அவர்கள் டெல்லியின் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு இரு தினங்களுக்கு முன்னர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

Farmers Protest | டெல்லி விவசாயிகள் போராட்டம்

Farmers Protest | டெல்லி விவசாயிகள் போராட்டம்

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையிலான குழு ஐந்து மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் பருப்பு வகைகள், சோளம் மற்றும் பருத்தி மட்டும் விவசாயிகளிடமிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையில் மத்திய அரசு கொள்முதல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்திட்டம் குறித்து விவசாய அமைப்புகள் நேற்று ஆலோசனை நடத்தின. இந்த நிலையில் தான் மத்திய அரசின் திட்டத்தை விவசாயிகள் அமைப்பு நிராகரித்து இருக்கிறது. இது குறித்து பஞ்சாப், ஹரியானா எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் சங்க தலைவர் சர்வான் சிங் கூறுகையில்,”‘ மத்திய அரசின் திட்டம் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே புதன் கிழமை அமைதியான முறையில் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்படுவோம்” என்றார்.

Farmers Protest | டெல்லி விவசாயிகள் போராட்டம்

Farmers Protest | டெல்லி விவசாயிகள் போராட்டம்

அதன்படி இன்று விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேற தொடங்கியுள்ளனர். இதனால் எல்லையில் பதற்றமான சூழலே நீடிக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *