Farmers protest: அரசின் திட்டத்தை நிராகரித்த விவசாயிகள் – 1200 டிராக்டர்களுடன் மீண்டும் `டெல்லி சலோ’ | Punjab Haryana farmers resumed their protest and assembled with 1200 tractor in delhi border

Ap24044343820021.jpg

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, டெல்லியை முற்றுகையிடும் வகையில் பிப்ரவரி 13 முதல் `டெல்லி சலோ” போராட்டத்தை நடத்திவருகின்றனர். இதில், சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் குவிந்திருக்கின்றனர். இதனால், டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க எல்லையில் கடுமையான தடுப்புகளுடன் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

அதேசமயம், தடுப்புகளைத் தகர்த்து டெல்லிக்குள் நுழைய டிராக்டர்கள், புல்டோசர் ஆகியவற்றுடன் விவசாயிகளும் தயாராக இருக்கின்றனர். போராட்டத்துக்கு முன்னரும், பின்னரும் விவசாய சங்கங்களுடன் மத்திய அமைச்சர்கள் குழு மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால், கடந்த 18-ம் தேதி நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் பருத்தி, சோளம், துவரை, உளுந்து, மசூர் பருப்பு ஆகியவற்றை 5 ஆண்டுகளுக்குக் கொள்முதல் செய்ய உறுதியளிப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *