Aadhaar Deactivation: `பாசிச சதி; ஆதாருக்கு மாற்று அட்டையை வழங்குவேன்..!’ – மத்திய அரசை சாடும் மம்தா| Mamata declared her government would issue alternative cards to people facing Aadhaar card deactivation.

Grgg.avif .png

இந்தியர்களின் தவிர்க்க முடியாத அடையாளமாக மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஆதார் கருதப்படுகிறது. வங்கிக் கணக்கு முதல் இறப்புச் சான்றிதழ் வரை அனைத்துக்கும் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு திட்டம் வகுத்திருக்கிறது. அதே நேரம் ஆதாரில் இருக்கும் தரவுகள் திருடப்படுவதாகவும், ஆதார் பாதுகாப்பற்று இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ரீ-செக்யூரிட்டி (resecurity) நிறுவனத்தின் அறிக்கையின்படி, சுமார் 81.5 கோடி இந்தியர்களின் ஆதார் உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தகவல்கள், டார்க் வெப்பில் கசிந்துள்ளதாகவும், அதை அடையாளம் தெரியாத நபர் $80,000 டாலருக்கு விற்கத் தயாராக இருப்பதாகவும் தகவல் தெரிவித்தது.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட சமூக மக்களின் ஆதார் அட்டைகள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் முடக்கப்பட்டிருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருக்கிறார். இது குறித்து பிர்பூமில் நடந்த பொது விநியோகத் திட்ட நிகழ்வில் பேசிய மம்தா பானர்ஜி, “நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு, எனது அரசின் பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பலன்கள், மக்களுக்குச் செல்வதைத் தடுக்கும் விதமாக, மக்களின் ஆதார் அட்டைகளை முடக்கியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *