`மக்கள் பிரதிநிதியாவது என் விருப்பம்; என்னை பிரித்துப் பார்க்காதீர்கள் ப்ளீஸ்’ – தமிழிசை ஓப்பன் டாக் | Puducherry lieutenant Governor Tamilisai press meet on the occasion of completing 3 years of her post

Whatsapp Image 2024 02 21 At 6 37 11 Pm.jpeg

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக மூன்று ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். அதையொட்டி மூன்று ஆண்டுகளில் தான் மேற்கொண்ட பணிகளின் அடிப்படையில் தயாரான `Reaching New Horizons’ என்ற புத்தகத்தை ஆளுநர் மாளிகையில் இன்று வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா முழுவதும் கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்திலும், புதுச்சேரி அரசியல்ரீதியான பரபரப்பில் இருந்தபோதுதான், புதுச்சேரிக்கு நான் பொறுப்பு துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டேன். புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தபோது, இரண்டு ஆலோசகர்களை மட்டும் வைத்துக்கொண்டு கொரோனாவை நாம் எதிர்கொண்ட விதம், இந்தியா முழுவதும் பாராட்டப்பட்டது. அதற்குக் காரணம் நான் இங்கு ஆளுநராக இல்லாமல், மருத்துவராக இருந்ததால்தான். அப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை முதலில் குறைக்கப்பட்டதும் புதுச்சேரியில்தான். அனைத்து இடங்களிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவியபோதும், புதுச்சேரிக்கு அந்த நிலைமை ஏற்படவில்லை.

நூலை வெளியிடும் ஆளுநர் தமிழிசை

நூலை வெளியிடும் ஆளுநர் தமிழிசை

அதேபோல மற்ற இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியபோதும், புதுச்சேரிக்கு தட்டுப்பாடு இல்லாமல் கொடுத்தோம். அத்துடன் தெருத்தெருவாக இறங்கி, அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி வலியுறுத்தினோம். இதெல்லாம் என்னுடைய கடமையாக இருந்தாலும், உங்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்கிறேன். ஆனாலும் என்னுடைய பயணம் சுமுகமானது கிடையாது. மிகவும் கடுமையான பயணம்தான். நான் வாரிசு இல்லாத ஒரு வாரிசு. நேரடி வாரிசாக என் அப்பாவுடன் நான் பயணித்திருந்தால், என்னுடைய பயணம் இலகுவாக இருந்திருக்கும். ஆனால் எதிர் அணியில், இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். அதனால் பல கடுமையான சூழல்களை சந்தித்து விட்டுத்தான், இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அதற்காக பிரதமர் மோடி அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி, தெலங்கானா என இரண்டு மாநிலங்களின் ஆளுநர் என்ற முறையில், அதிகமான முதல்வர்களுடன் பணியாற்றிய பெருமை எனக்கு இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *