`பெண்களுக்கு தனி Gym, மழைநீர் தேங்குவதை தவிர்க்க Sponge park’ – சென்னை மாநகராட்சி பட்ஜெட் ஹைலைட்ஸ் | “Ladies Gym and others, 2024-25 budget highlights of Chennai Corporation

Whatsapp Image 2024 02 21 At 12 32 42.jpeg

மன்றம்:

மேம்பாட்டு நிதி உயர்வு:

மன்றத்தை பொறுத்தவரையில், 2024 2025 ஆம் நிதியாண்டு முதல் பெருநகர சென்னை மாநகராட்சி “மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி”யானது ரூ.2.00 கோடியிலிருந்து ரூ.3.00 கோடியாகவும் உயர்த்தப்படும் எனவும், மாமன்ற உறுப்பினர்களுக்கு “வார்டு மேம்பாட்டு நிதி” ரூ.40.00 இலட்சத்திலிருந்து ரூ.45.00 இலட்சமாக உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கவுன்சிலர்களுக்கு TAB:

இவை தவிர, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் உள்ள பணிகளை மேம்படுத்தவும், காகிதமில்லா நடைமுறையினை கொண்டு வருவதற்கும், அவசியம் கருதியும், ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் 200 எண்ணிக்கையிலான TAB கொள்முதல் செய்து மாமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புக்கும் மாநகராட்சி கவுன்சிலர்கள் மேசையைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனர். இவை தவிர, மருத்துவ சேவைகள் துறை, பாலங்கள், பேருந்து சாலைகள், வருவாய் உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயாதாஸ்

வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயாதாஸ்

மேயரின் உரை முடிந்த பிறகு, வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயாதாஸ் சென்னை மாநகராட்சியின் வருவாய் வரவினங்கள், செலவினங்கள் குறித்து உரையாற்றினார். அதில், 2024-2025 ஆம் நிதியாண்டின் வருவாய் கணக்கு தலைப்பில், வருவாய் வரவு ரூ.4464.60 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4727.12 கோடியாகவும் இருக்கும். மூலதன வரவு ரூ.3455.00 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ.3140.58 கோடியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, நாளை (22.02.2024) காலை 10 மணியளவில் வரவு செலவு திட்டத்தின் மீது மன்றத்தில் விவாதம் நடைபெற்று வரவு செலவுத் திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கும் நிகழ்வு நடைபெறும் என அறிவித்து மாமன்றக் கூட்டத்தை ஒத்திவைத்தார் மேயர் பிரியா.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *