குப்பை குவியலாக காட்சியளிக்கும் பழனி – திண்டுக்கல் பைபாஸ்… நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்? |Will the waste in Dindigul Pazani bypass removed?

Tt.jpg

தற்பொழுது தைப்பூச சீசன் முடிந்ததையடுத்து அவர்கள் இவ்விடத்தை காலி செய்து விட்டு அவர்களின் சொந்த ஊருக்கு அல்லது திருவிழாக்கள் நடக்கும் வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இவர்கள் பழனி முருகன் கோவில் சீசன் (கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம்) சமயங்களில் வந்து இங்கு கூடாரம் அமைத்து தங்கி, பிறகு சீசன் முடிந்ததும் கிளம்பி சென்று விடுவார்கள்.

தற்போது தைப்பூச சீசன் நிறைவடைந்தையடுத்து அவர்கள் இவ்விடத்தை விட்டு சென்றுவிட்டனர். ஆனால் அவர்கள் போட்டுவிட்டு சென்ற துணிகள், குப்பைகள், கூடாரம் அமைக்க பயன்படுத்திய பிளாஸ்டிக் பைகள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள்.

வட இந்திய தொழிலாளர்கள் இவ்விடத்தை விட்டு சென்று 25 நாள்கள் ஆகின்றது. ஆனால் இன்னும் அக்குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு, காற்றடிக்கும் போது அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீதுபடுவதாகவும், காற்றில் குப்பைகள் ரோட்டிற்கு வந்துவிடுவதாகவும், இவ்விடத்திற்கு அருகில் வசிப்பவர்களுக்கு பெரும் தொந்தரவாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிலர் இதனை குப்பைகள் கொட்டும் இடமாக பயன்படுத்தவும் தொடங்கி விடுகிறார்கள்.

ஆனால், இதுவரை நகராட்சி நிர்வாகம் இந்த குப்பைகளை அகற்றியபாடில்லை. பொதுமக்கள், பக்தர்கள், மாணவர்கள், நோயாளிகள் என அனைவருக்கும் இது சிரமத்தை ஏற்படுத்திவிடுகிறது. இக்குப்பைகளை நகராட்சி நிர்வாகம் விரைந்து நீக்கி, அவ்விடத்தை தூய்மைப்படுத்தி தரவேண்டும் என்றும், அந்த இடத்தை பழைய படி தூய்மைப்படுத்தி கழிவுகளை அகற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *