“என் மகன் சீட் கேட்பது வாரிசு அரசியல் அல்ல..!" – விளக்கம் சொன்ன ஜெயக்குமார்

Whatsapp Image 2022 01 20 At 2 28 48 Pm.jpeg

மக்களவைத் தேர்தல் நெருங்கிவருவதால், தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் சீட் பகிர்வு பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. அதேசமயம், பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இல்லை என்று அழுத்தமாகக் கூறிவரும் அ.தி.மு.க-வில் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அதேசமயம், யார் வந்தாலும் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கும் என்று பா.ஜ.க கூறிவருகிறது. இதனாலேயே, பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க இன்னும் கூட்டணியில் இருக்கிறதா, இல்லையா என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும் என்று பேசப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார்

இத்தகைய சூழலில், அ.தி.மு.க-வில் இன்று விருப்ப மனு விநியோகம் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், தி.மு.க-வில் நடப்பதுதான் வாரிசு அரசியல் என்றும், அ.தி.மு.க-வில் தன் மகன் ஜெ.ஜெயவர்தன் சீட் கேட்பது வாரிசு அரசியல் இல்லை என்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

அ.தி.மு.க அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் நிகழ்ச்சி தொடங்கியதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமாரிடம், `உங்கள் மகன் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார். 2014-ல் ஏற்கெனவே வெற்றி பெற்றிருக்கிறார். அதேநேரத்தில் மீண்டும் வாய்ப்பு கேட்டிருக்கிறார். அப்படியிருக்கும்போது, தி.மு.க-வை வாரிசு அரசியல் என்று சொல்வது இங்கும் பொருந்துமா?’ என்று பத்திரிகையாளர் கேள்வியெழுப்பினார்.

ஜெயக்குமார் – மகன் ஜெயவர்தன்

அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், “தி.மு.க பொதுவாகவே ஒரு குடும்ப அரசியல் கட்சி. அப்பா, மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்ற தலைமுறையில் வருகிறது. அ.தி.மு.க-வில் அந்த மாதிரி யாரும் இல்லை. இங்கு வாரிசு அரசியலே கிடையாது. உதாரணமாக, தேர்தல் A, B ஃபார்ம்களில் பொதுச் செயலாளர் தன் மகனுக்கு கையெழுத்துப் போட்டுக்கொடுத்தல் அது வாரிசு அரசியல். அந்த மாதிரி அ.தி.மு.க-வில் எந்தப் பொதுச் செயலாளரும் A, B ஃபார்ம்களில் தன் மகனுக்கு கையெழுத்துப் போட்டுக்கொடுக்கவில்லையே… அந்த வகையில் என் மகன் கேட்பது வாரிசு அரசியலுக்குள்ளேயே வராது.

ஆனால், தி.மு.க அப்படி கிடையாது. கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின், அவருக்குப் பிறகு உதயநிதி, அவருக்குப் பிறகு இன்பநிதி. இன்று அந்த கட்சிக்காரர்கள், உதயநிதிக்கும் இன்பநிதிக்கும் சேவை செய்வதை மானங்கெட்ட பொழப்பு என்று நான் கூற முடியாது. அதை அவர்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

இன்பநிதி, உதயநிதி, ஸ்டாலின்

2026-ல் நாங்கள் ஆட்சியமைத்த பிறகு தி.மு.க-வுக்கு நிரந்தர வனவாசம்தான்.” என்று கூறினார்.

ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் 2014 மக்களைவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பதும், அதற்கடுத்த மக்களைவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *