`அரசு கேபிள் டிவி இணைப்பு குறைந்ததற்கு அமைச்சர் மகன் தலையீடே காரணம்’ – ஆவேசமான மாவட்ட ஊராட்சி தலைவர் | The district panchayat president alleged minister’s son over government cable TV issue

Img 20240221 Wa0004.jpg

மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லியன் ட் தாஸ்

மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லியன் ட் தாஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோயில் விழாக்களிலும், முஸ்லிம் பள்ளி விழாக்களிலும் பாரம்பர்யமாக யானைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. கடந்த ஆறு மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மட்டும் யானை ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 வளர்ப்பு யானைகள் மட்டுமே உள்ளதால் அவற்றை ஊர்வலத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்கின்றனர். ஆனால், பிற மாவட்டங்களில் இருந்து யானைகளை கொண்டுவந்து ஊர்வலத்துக்கு பயன்படுத்தலாம். அதற்கு அதிக அளவு பணம் செலவாகிறது. மாவட்டத்தில் யானை ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மாவட்ட அமைச்சர் தலையீடு இருப்பதாக கருதுகிறோம். கிராம ஊராட்சிகளை பேரூட்சிகளாக மாற்றவோ, பேரூராட்சிகளுடன் இணைக்கவோ கூடாது என கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ்

இது தொடர்பாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தரப்பில் விசாரித்தபோது, “அமைச்சர் மகன் மட்டும் தனியார் கேபிள் டிவி நடத்தவில்லை. இங்கு நிறைய பேர் தனியார் கேபிள் டிவி நடத்திக் கொண்டிருக்கின்றனர். அரசு கேபிள் டிவி இணைப்புகள் குறைந்திருப்பதற்கு, அரசு கேபிள் டிவி செட்டப் பாக்ஸ்கள் வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதமும் முக்கிய காரணம் என்று சொல்லலாம். ஏனென்றால், இந்த தாமதம் காரணமாக, மக்கள் தனியார் கேபிள் டிவி-க்கள் பக்கம் செல்கின்றனர்.” என்றனர்.

மாவட்ட ஊராட்சித் தலைவர் மெர்லியன்ட் தாஸின் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் கேட்க அமைச்சர் மனோ தங்கராஜின் மகனைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவர் தரப்பில் விளக்கமளிக்கப்படும் பட்சத்தில், உரியப் பரிசீலனைக்குப் பின்னர் அதைப் பதிவிட தயாராக இருக்கிறோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *