Chandigarh: `தேர்தல் அதிகாரி செய்தது சட்டவிரோதம்; AAP வேட்பாளரே வெற்றியாளர்’- உச்ச நீதிமன்றம் அதிரடி | Supreme Court declares AAP candidate as winner of Chandigarh mayor election

Vikatan 2024 02 199ee547 4b5f 403d 8fb2 6775282280f0 64e8214302469.avif .png

அதன்படி, இந்த வழக்கில் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் நீதிமன்ற அமர்வு கூடியது. அப்போது, செல்லாது என அறிவிக்கப்பட்ட அந்த 8 வாக்குச்சீட்டுகளை தாங்கள் பார்க்க விரும்புவதாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். அதையடுத்து, நீதிமன்ற அதிகாரியொருவர் அந்த வாக்குச்சீட்டுகளை அமர்வில் சமர்ப்பிக்க, நீதிபதிகள் அனைவரும் அந்த வாக்குச்சீட்டுகளைப் பார்வையிட்டனர்.

பிறகு, தலைமை நீதிபதி சந்திரசூட் வாக்குச்சீட்டுகளை வழக்கறிஞர்களிடம் காண்பித்து, “இந்த 8 வாக்குகளும் குல்தீப் குமாருக்குப் பதிவாகியிருக்கின்றன. அந்த வீடியோவில் பார்த்ததுபோலவே, தேர்தல் அதிகாரி அனில் மஸ்ஹி வாக்குச்சீட்டுகளில் கோடு போட்டிருக்கிறார். வாக்குச்சீட்டுகள் சிதைக்கப்பட்டதால் கோடு போட்டதாகச் சொன்னீர்களே அனில் மஸ்ஹி, வாக்குச்சீட்டு எங்கே சிதைக்கப்பட்டிருக்கிறது?” என்று கேள்விகேட்டார்.

சண்டிகர் மேயர் தேர்தல் - டி.ஒய்.சந்திரசூட்

சண்டிகர் மேயர் தேர்தல் – டி.ஒய்.சந்திரசூட்

அதைத் தொடர்ந்து, அனில் மஸ்ஹி, அவரின் வழக்கறிஞர் ரோஹத்கி மற்றும் குல்தீப் குமாரின் வழக்கறிஞர்கள் அந்த வாக்குச்சீட்டுகளைப் பார்த்தனர்.

அதையடுத்து, குல்தீப் குமாரின் வழக்கறிஞர் குர்மிந்தர் சிங், “இது ஒரேயொரு வரி மட்டுமே. அதனால், வாக்குச்சீட்டு செல்லாதவையாகாது” என்று கூறினார்.

பின்னர், அனில் மஸ்ஹியின் வழக்கறிஞர் ரோஹத்கி எழுந்து, “ஒரு வரி போட்டதன் மூலம், அவை செல்லாதவை என அதிகாரி அடையாளம் காட்டியுள்ளார். அது சரியாகவும் இருக்கலாம் அல்லது தவறாகவும் இருக்கலாம். அது அவருடைய மதிப்பீடு. மேலும், அந்த நேரத்தில் அவையில் பரபரப்பு ஏற்பட்டதால், கேமரா வேலை செய்கிறதா என்று கேமராவைப் பார்த்தார். அதுவொன்றும், குற்றவாளி கேமராவைப் பார்ப்பதுபோல் அல்ல” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *