`டாலர் சிட்டி’யை குறிவைக்கும் திமுக… தக்கவைக்க போராடும் சி.பி.ஐ! – திருப்பூர் தொகுதி யாருக்கு?| Tirupur Constituency – battle between for DMK and CPI

Vikatan 2020 04 Fb5f0e59 7c07 4716 B680 Ad0232f63872 P30f.jpg

ஒருவேளை சுப்பராயன் இல்லாதபட்சத்தில் சிபிஐ-யின் மாநிலத் துணைச் செயலாளரான பெருந்துறையைச் சேர்ந்த பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ரவி ஆகியோர் தலைமையின் சாய்ஸாக இருக்கலாம்” என்கின்றனர்.

இதுதொடர்பாக விவரம் அறிந்த திமுக நிர்வாகிகள் பேசுகையில், “திருப்பூர் மக்களவைத் தொகுதியைப் பொருத்தவரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொழிலாளர்கள் அதிகமுள்ள திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதியில் மட்டும்தான் செல்வாக்கு உள்ளது.

மற்ற அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் தொகுதிகளில் சொல்லிக் கொள்ளும்படி வாக்கு வங்கி இல்லை. உதாரணமாக கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் சுப்பராயன் 33 ஆயிரம் வாக்குகள்தான் பெற்றார். கடந்த தேர்தலிலும் கூட திமுக-வின் வாக்கு பலத்தில்தான் சுப்பராயன் வெற்றி பெற்றார். கொங்கு மண்டலத்தில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பெரும் பின்னடை திமுக சந்தித்தது. இந்த முறை வெற்றி வாய்ப்பு இருந்தும் ஏன் தவறவிட வேண்டும் என திமுக தலைமை சிந்திக்கிறது. திமுக தொண்டர்களும் அதையே விரும்புகின்றனர்” என்கின்றர் உடன்பிறப்புகள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *