சென்னையின் முக்கிய மக்களவைத் தொகுதிகள்… பிரதான கட்சிகளின் வேட்பாளர் ரேஸில் யார் யார்?! | Who has a chance to contest in Chennai’s Lok Sabha constituencies?

Central Railway Station Chennai.jpg

அரசியல் பார்வையாளர்கள் சிலரோ “அ.தி.மு.க, பா.ஜ.க வேட்பாளர்கள் தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. குறிப்பாக பா.ஜ.க-விலும் அ.தி.மு.க-விலும் கூட்டணிக்கு சில கட்சிகள் வரலாம் என்ற பேச்சு இருப்பதால், வருபவர்கள் சென்னை தொகுதியை கேட்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போதைய நிலையில், உத்தேசமாக பா.ஜ.க சார்பில் தென்சென்னையில் கரு.நாகராஜன் அல்லது எஸ்.ஜி சூர்யா களமிறங்க வாய்ப்புள்ளது. மத்திய சென்னையில் வினோஜ் பி செல்வம் நிற்க வாய்ப்புகள் இருக்கின்றன.

அ.தி.மு.க கூட்டணியை பொறுத்தவரையில் மத்திய சென்னையை எஸ்.டி.பி.ஐ கட்சிக்கும், தென்சென்னை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனையும் களமிறக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

சீமான், அண்ணாமலை

சீமான், அண்ணாமலை

தி.மு.க மற்றும் அ.தி.மு.கவில் வேட்பாளர்களுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியிருக்கும் நிலையில் வேறு யாரெல்லாம் வேட்பாளராக நிற்க விரும்புகிறார்கள் எனத் விருப்பமனு தாக்கல் செய்யும் போது முழுமையாக தெரிய வரும். சென்னையை பொறுத்தவரை தி.மு.க-வின் கோட்டை என அக்கட்சியினர் சொல்லிவரும் நிலையில் மக்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள். அரசியல் கட்சிகள் யாரையெல்லாம் சென்னையிலுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளராக களமிறக்குகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *