“ஊழல்வாதிகள்… 740 எம்.எல்.ஏ, எம்.பி-கள் பாஜக-வில் இணைந்திருக்கிறார்கள்" – JMM தாக்கு

Fgoujyiaaaann1k.jfif .png

கடந்த 10 ஆண்டுகளில் ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய 740 எம்.எல்.ஏ, எம்.பி-க்கள் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்கள் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா குற்றம்சாட்டியிருக்கிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான சுப்ரியோ பட்டாச்சார்யா, “2014 – 2024 வரை பா.ஜ.க ஆட்சியில் யார் என்ன சாப்பிட வேண்டும், எதை உடுத்த வேண்டும், என்னப் படிக்க வேண்டும் எனப் பல விசித்திரமான முடிவுகளை நாடு பார்த்திருக்கிறது.

அமித் ஷா, மோடி

ஆளும் பா.ஜ.க கட்சியின் கூற்றுப்படிப் பார்த்தால், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள். பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளை, கொள்கைகளை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள். அதே நேரம் பா.ஜ.க-வில் இணைந்திருப்பவர்கள் அனைவரும் ஊழலற்ற, தூய்மையானவர்கள். தேச பக்தர்கள்.

இதில் ஒரு ஆச்சர்யம் இருக்கிறது… 2014 முதல் 2024 வரை பா.ஜ.க-வால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊழல்வாதி எனக் குற்றம்சாட்டப்பட்ட 740 எம்.எல்.ஏ, எம்.பி-கள் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்கள்.

அவர்கள்தான் இப்போது பா.ஜ.க-வுக்கு பிடித்தமானவர்கள். பா.ஜ.க வழக்கமாக, `பழங்குடியினருக்கு மரியாதை அளிக்கப்படுகிறது.

சுப்ரியோ பட்டாச்சார்யா

அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது’ எனக் கூறும். ஆனால், உண்மை என்னவென்றால், அவர்களுக்கு பழங்குடியினத்திலிருந்து முதல்வர்கள் வருவதை விரும்பவில்லை. அப்படி யாராவது பழங்குடியின முதல்வராக வந்தால், அவருக்கான இடம் சிறையில்தான் பா.ஜ.க திட்டமிட்டிருக்கும்” எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *