அதிகம் கடன் வாங்குவது மோடியின் மத்திய அரசா அல்லது ஸ்டாலினின் மாநில அரசா…? #TNBudgetupdate | debt burden of tamil nadu government vs union govt

Pan 1 .png

2011-12 நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் கடன் 1,30, 630 கோடி ரூபாயாக இருந்தது. இந்தக் கடனை அ.தி.மு.க அரசு படிப்படியாக உயர்த்தி, 2020-21 நிதியாண்டில் 4,85,502 கோடி ரூபாயாக ஏற்றிவிட்டது.

இது போக, மத்திய அரசின் கடன்கள் 2014-ம் ஆண்டில் 54 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 10 ஆண்டுகளில் 205 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்துவிட்டதாகவும், இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை எனவும் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

கடன் சுமை

கடன் சுமை

தமிழ்நாடு அரசின் கடன் 8,33,361.80 கோடி ரூபாயாக உயரும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எவ்வளவு கடன்கள் இருக்கின்றன?

மத்திய அரசுக்கு உள்நாட்டுக்கடன், வெளிநாட்டுக் கடன் என இரண்டு வகையான கடன்கள் இருக்கின்றன. மத்திய அரசு கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டின்படி, 2024 நிதியாண்டு இறுதியில் உள்நாட்டுக் கடன்கள் 163,35,070.06 கோடி ரூபாயாகவும், வெளிநாட்டுக் கடன்கள் 5,37,484.10 கோடி ரூபாயாகவும் இருக்கும். ஆக, மொத்தமாக 168,72,554.16 கோடி ரூபாய் கடன்கள் இருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *