Tamil News Live Today: நெருங்கும் மக்களவைத் தேர்தல்… இன்று தாக்கலாகிறது தமிழ்நாடு பட்ஜெட்!

Assembly.jpg

 அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதலாவது பட்ஜெட்!

இந்த ஆண்டின், தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டம், இம்மாதம் 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என் ரவி தனது உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்த காரணத்தினால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவை குறிப்பில் இடம் பெற்றது.

அமைச்சர் தங்கம் தென்னரசு

இந்த நிலையில் சட்டசபையில் இன்று 2024 – 25 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. காலை 10 மணி அளவில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதலாவது பட்ஜெட் இதுவாகும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் அதிக கவனம் பெற்றிருக்கிறது. இம்முறை பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. `மாபெரும் தமிழ்க் கனவு’ என ஏழு தலைப்புகளில் முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *