தாமரைக்கு அருகில் முரசா? – தேமுதிக கிளைமேட் சேஞ்ச்!

Whatsapp Image 2024 02 19 At 18 49 34.jpeg

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, அந்தக் கட்சியின்மீது அனுதாபப் பார்வை தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. இதை மையமாக வைத்து கூட்டணிக்கு அழைப்புவிடும் கட்சிகளிடம் 14 லோக் சபா சீட்டும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் கேட்கிறார் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா.

விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா

முன்னதாக தே.மு.தி.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இணையவேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. இருப்பினும், சீட் அதிகமாக கேட்பதால் தே.மு.தி.க-வுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அ.தி.மு.க தயக்கம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், பா.ஜ.க-வின் டெல்லி புள்ளி ஒருவர் பிரேமலதாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக தே.மு.தி.க சீனியர் புள்ளி ஒருவரிடம் பேசினோம். “தலைவர் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு கட்சியின் தொண்டர்கள் மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். அத்துடன் அனுபாத அலையும் இருப்பதால்தான், பிரதானக் கட்சிகள் தே.மு.தி.க-வை தங்கள் கூட்டணிக்குள் இணைக்கவேண்டும் என்று முயல்கின்றன.

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி

அதன்படிதான், 14 சீட் கேட்டிருக்கிறார் பொதுச்செயலாளர் பிரேமலதா. ஆனால், தே.மு.தி.க-வின் கடந்த தேர்தல் வாக்கு சதவிகிதத்தை முன்வைத்து, குறைவான சீட்டு தருவதாக இலைக்கட்சியினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், ராஜ்ய சபா சீட் தர வாய்ப்பே இல்லையென இலைக்கட்சி தலைமை தெளிவாகச் சொல்லிவிட்டது.

அதேநேரத்தில் டெல்லி உணவுத்துறை புள்ளி பிரேமலதாவிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார். இலைக்கட்சியுடன் நாங்கள் சேரக் கூடாதென்று தாமரை கட்சி தெளிவாக இருக்கிறது. அதனால், இலைக்கட்சி தருவதாகச் சொன்னதைவிட கூடுதல் சீட் தருவதாக டெல்லி உறுதியளித்திருக்கிறது.

பிரதமர் மோடி

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றால்தான் கட்சியை பலப்படுத்த முடியும் என்பதால், நிர்வாகிகள் இலைக்கட்சியிடன் சேரவேண்டுமென்று சொல்கிறார்கள். ஆனால், தலைமை வேறுவிதமாக யோசிக்கிறது. தலைமை எடுக்கும் முடிவுதான் இறுதியானது. இது தொடர்பான அறிவிப்பு விரைவிலேயே வெளியாகும்” என்றார் சூசகமாக.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *