“இந்தியா கூட்டணியில் கருத்து முரண் வந்துபோவது பற்றி கவலையில்லை” – திருமாவளவன் ஓப்பன் டாக் | `I don’t care about differences of opinion in India alliance” – Thirumavalavan Open Talk

Whatsapp Image 2023 11 11 At 12 43 36.jpeg

`இந்த விமர்சனம் சரிதான். மாநிலக் கட்சிகள், ஐக்கிய முன்னணியாக தங்களுக்குள் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வதே இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு. எனவே, நிதிப் பங்கீடு பிரச்னையின்போது, எல்லா மாநிலங்களிலும் மாநில கட்சிகள் ஒற்றுமையாக நின்று குரல்கொடுக்க வேண்டும். தேசிய கட்சிகள்தான் ஆட்சியில் இருக்கின்றன. எதிர்காலத்தில் மாநிலக் கட்சிகளெல்லாம் சேர்ந்துதான் ஆட்சியமைக்க முடியும். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதிலிருந்து மாநில உணர்வுகள் மேலோங்கியுள்ளன. மொழிவாரி உரிமைகள் பெரிய குரலாக ஒலிக்கிறது. மாநிலக் கட்சிகள் வலுப்பெறுகிறது; மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து ஆட்சியை தீர்மானிக்கக்கூடிய இடத்துக்கும் ஆட்சி அதிகாரத்துக்குமே வரலாம். அந்த அடிப்படையில், மாநில அரசுகளை புறக்கணிக்கக்கூடிய அரசு பா.ஜ.க-வாக இருந்தாலும் காங்கிரஸாக இருந்தாலும், மாநில உரிமைகளுக்காக குரல்கொடுக்க, மாநில கட்சிகளின் கூட்டமைப்பு வேண்டும்!”

டெல்லியில் சித்தராமையா போராட்டம்...

டெல்லியில் சித்தராமையா போராட்டம்…

“இந்த முன்னெடுப்பை காங்கிரஸ், பா.ஜ.க விரும்ப மாட்டார்களே?”

“கட்டாயம் விரும்பமாட்டார்கள். இந்த முரண்களையெல்லாம் கடந்துதான் ஐக்கியமாக வேண்டியுள்ளது. ஒவ்வொரு பிரச்னையின்போதும் வெவ்வேறு அணிகள் உருவாகும். மாநில உரிமைகள் என்கிறபோது தேசியக் கட்சிகளை தவிர்த்துவிட்டுத்தான் மாநில கட்சிகள் ஒன்று சேர முடியும். தேசிய கட்சிகளுக்கிடையேயான முரண்பாடு என்றால், பா.ஜ.க-வை தனிமைப்படுத்திவிட்டு எல்லோரும் காங்கிரஸோடு நின்றாக வேண்டும்!”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *