“அம்பானி அதானியின் ஏஜென்ட் தான் பிரதமர் மோடி..!” – திருவாரூரில் அமைச்சர் சிவசங்கர் | TN minister siva shankar slams modi government in thiruvarur meeting

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தின் காரணமாக தான், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை மோடி அரசாங்கம் முடக்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் ஜார்கண்ட் மாநில முதல்வரை கைது செய்வது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கதுறையின் மூலம் சம்மன் அனுப்புவது போன்ற செயல்களே அவரின் தோல்வியை ஒப்புக் கொள்ளும் அளவில் உள்ளது. அமலாக்கத்துறையை வைத்துக்கொண்டு மோடி அரசின் ஊழல்களை வெளிக்கொண்டுவரும் மாநில அமைச்சர்கள் மீது நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்து சிறையில் அடைப்பதையே மோடியும் அமித் ஷாவும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் தான் நம்முடைய அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீதும் அமலாக்கத்துறையை வைத்து பொய் குற்றச்சாட்டை ஏற்படுத்தி அவரை சிறையில் அடைத்துள்ளார்கள். சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் நடத்திய  கூத்தையெல்லாம் நீங்கள் ஊடகங்களில் வாயிலாக  பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். முதலாவதாக தேசிய கீதத்தை பாட வேண்டும் என்று ஆளுநர் சொல்கிறார். எப்போதும் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும். அந்த நடைமுறை கூட தெரியாதவர்கள் எல்லாம் ஆளுநராக வந்துவிட்டார்கள். இந்திய நாட்டில் உள்ள வளங்களை எல்லாம் அயல் நாட்டிற்கு கூறு போட்டு விற்பதற்காக மோடி, மீண்டும் இந்திய நாட்டை ஆள துடித்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. கழகத்தின் தொண்டர்கள் அனைவரும் நாட்டு மக்களிடையே வீடு வீடாக சென்று ஒன்றிய மோடி அரசாங்கத்தின் பாசிச திட்டங்களை மக்களுக்கு  எடுத்துச் சொல்லி “இந்தியா” கூட்டணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இந்த பரப்புரை கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *