`சசிகலா, டிடிவி, ஓபிஎஸ்… பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்!' – ஓபிஎஸ்

Whatsapp Image 2022 12 21 At 2 44 19 Pm.jpeg

“பா.ஜ.க-வை முழுமையாக ஆதரிக்கிறோம். 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை பா.ஜ.க தந்துள்ளதால், ஆதரவளிப்பதைத் தவிர மாற்றுக் கருத்துக்கே இடமில்லை” என்று தெரிவித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.

ஓபிஎஸ்-சசிகலா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி சித்தன் குடும்ப விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வம், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம்” என்றார்

`சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ் ஒரே கூட்டணியாக இணைவீர்களா?’

“இணைய வேண்டும் என விரும்புகிறேன். உறுதியாக இணைய வேண்டும்” என்றவர்,

ஓபிஎஸ்

“எங்களை பொறுத்தவரையில் பா.ஜ.க-வை முழுமையாக ஆதரிக்கிறோம். 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை பா.ஜ.க தந்துள்ளதால், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதைத் தவிர மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.

பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க-வின் சக்திகள் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க-விற்கு வெற்றி கிடைக்கும்” என்றவரிடம்,

டிடிவி தினகரன்

`எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் வேட்பாளர்களை எதிர்த்து வேட்பாளர்களை களமிறக்குவீர்களா?’

“பொறுத்திருந்து பாருங்கள்!” எனக் கூறிவிட்டுக் கிளம்பினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *